This Article is From Jul 03, 2020

ஏப்ரல் 1ம் தேதி முதல் மாநிலங்களுக்கு 2 கோடி N95 முகக்கவசம் வழங்கியுள்ளோம்: மத்திய அரசு

கூடுதலாக 11,300 மேக் இன் இந்தியா வென்டிலேட்டர்கள் இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில், 6,154 ஏற்கனவே பல்வேறு மருத்துவமனைகளுக்கும் வநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் 1ம் தேதி முதல் மாநிலங்களுக்கு 2 கோடி N95 முகக்கவசம் வழங்கியுள்ளோம்: மத்திய அரசு

Centre has distributed more than 2.02 crore N95 masks among the states.

New Delhi:

கடந்த, ஏப்ரல்.1ம் தேதி முதல், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் 2.02 கோடிக்கும் அதிகமான N95 முகக்கவசங்கள் மற்றும் 1.18 கோடிக்கு மேற்பட்ட பிபிஇ கிட்களை இலவசமாக விநியோகித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூடுதலாக 11,300 மேக் இன் இந்தியா வென்டிலேட்டர்கள் இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில், 6,154 ஏற்கனவே பல்வேறு மருத்துவமனைகளுக்கும் வநியோகிக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து, மத்திய அரசு அவற்றை நிறுவுவது, ஆய்வு மேற்கொள்வதையும் உறுதி செய்கிறது. இது கொரோனா ஐசியூ வார்டுகளில் வென்டிலேட்டர்கள் கிடைப்பதில் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது.

தொடர்ந்து, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சகம் 1.02 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி வருகிறது, அவற்றில் 72,293 ஆக்ஸிஜன் படுக்கைகளை வலுப்படுத்த வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 6.12 கோடிக்கும் அதிகமான ஹைட்ராக்சி குளோரோக்குயின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கு மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் அயராது உழைத்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் முக்கிய பங்கு உள்ளது.

கொரோனா வசதிகளை அதிகரிப்பதோடு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு துணைபுரிய மருத்துவ வசதிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், மத்திய அரசு வழங்கிய பெரும்பாலான தயாரிப்புகள் ஆரம்பத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், தொற்றுநோய் காரணமாக உலகளாவிய தேவை இருப்பதாகவும், இதன் விளைவாக சந்தைகளில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது. 

எனினும், சுகாதாரம், ஜவுளி, மருந்துகள், கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிற அமைச்சங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், உள்நாட்டு உற்பதித்தியில் இந்த காலகட்டத்தில் அத்தியாவசியமான தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகள், N95 முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்பட்டுள்ளது. 

"இதன் விளைவாக, ஆத்மனிர்பர் பாரத்" மற்றும் "மேக் இன் இந்தியா" ஆகியவற்றிற்கான தீர்வு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசால் வழங்கப்படும் பெரும்பாலான பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன, "என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.