This Article is From Jul 05, 2020

கொரோனா தொற்றில் ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!

நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமலில் உள்ள நிலையிலும் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றில் ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!

து வரை நாடு முழுவதும் 19,268 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

New Delhi:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று மாலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 6.9 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி ரஷ்யாவின் ஒட்டு மொத்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை என்பது 6.8 லட்சமாக உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் 15 லட்சம் கொரோனா நோயாளிகளை கொண்டுள்ளது. அமெரிக்கா 28 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். அதே போல உயிரிழப்பு எண்ணிக்கையும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 613 என்கிற எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது. இது வரை நாடு முழுவதும் 19,268 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. டெல்லி மற்றும் தமிழகம் சேர்த்து 7,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமலில் உள்ள நிலையிலும் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

.