This Article is From Jun 02, 2020

“இந்தியப் பொருளாதார வளர்ச்சி!”- பிரதமர் மோடியின் டாப் 10 கருத்துகள்

"பொருளாதாரத்தை மீட்பது ஒரு பக்கம் என்றால், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது இன்னொரு பக்கம் இருக்க வேண்டும்."

“இந்தியப் பொருளாதார வளர்ச்சி!”- பிரதமர் மோடியின் டாப் 10 கருத்துகள்

'நாட்டில் உள்ள பல லட்ச சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் பொருளாதார வளர்ச்சியின் மையம்.'

ஹைலைட்ஸ்

  • சிஐஐ வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றியுள்ளார் பிரதமர்
  • இந்தியாவில் ஜூன் மாத இறுதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • அதே நேரத்தில் பல்வேறு தளர்வுகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளன
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர கூட்டத்தில் பேசினார். அப்போது கொரோனா வைரஸால் துவண்டு கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் மீட்பு குறித்து அவர் பேசினார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவில் பகுதி பகுதியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இப்படிச் செய்வதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. 

பிரதமர் உரையின் ஹைலைட்ஸ்:

-நம்பிக்கையுள்ள நம் நாடு அதன் வளர்ச்சியை மீட்டெடுக்கும்.

-கொரோனா நெருக்கடியிலிருந்து இந்தியா விடுபடும். இந்தியாவின் திறன், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் அறிவில் எனக்கு நம்பிக்கையுள்ளது. எனக்கு விவசாயிகள் மீது நம்பிக்கையுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீது நம்பிக்கையுள்ளது. அதனால்தான் சொல்கிறேன், இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று.

-இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற ஊக்கம், கண்டுபிடிப்பு, முதலீடு, ஒருங்கிணைத்தல் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய 5 விஷயங்கள் தேவை.

-‘வளர்ச்சியைப் பெறுவோம்' என்று சொல்வதை விட, ‘கண்டிப்பாக நாம் வளர்ச்சியைப் பெற்றுவிடுவோம்' என்று சொல்ல விழைகிறேன்.

-ஒவ்வொரு படியாக பொருளாதார வளர்ச்சியைப் பெறும் பாதையில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா.

-பொருளாதாரத்தை மீட்பது ஒரு பக்கம் என்றால், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது இன்னொரு பக்கம் இருக்க வேண்டும். 

-எங்களைப் பொறுத்தவரை சீர்திருத்தங்கள் என்றால், தைரியமான முடிவுகளை எடுப்பது மற்றும் உரிய காலத்தில் அவை நிறைவேற்றப்படுவதும் ஆகும்.

-முதலீடு மற்றும் வர்த்தகத்திற்குத் தொடர்ச்சியாக நாங்கள் உகந்த சூழலை உருவாக்கப் பணி செய்து வருகிறோம்.

-நாட்டில் உள்ள பல லட்ச சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் பொருளாதார வளர்ச்சியின் மையம்.

-இன்று உலகளவில் இந்தியா பெரும் இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு நம் மீது நம்பிக்கையுள்ளது. நம்பிக்கைக்குரிய கூட்டாளிக்காக காத்திருக்கிறது உலகம். இந்தியா அந்த கூட்டாளியாக இருக்க திறன் படைத்துள்ளது. 

.