This Article is From Apr 05, 2020

"உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்" - ஏர் இந்தியா விமானத்தை பாராட்டிய பாகிஸ்தான் ஏ.டி.சி

கராட்சிக்கு மிக அருகாமையில் பறக்க அனுமதித்து தங்களது பயண நேரத்தை 15 நிமிடங்கள் வரை குறைத்ததாக அவர் தெரிவித்தார்

ஏர் இந்தியா விமானங்கள் துருக்கிய மற்றும் ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றதாக அவர் கூறினார்

ஹைலைட்ஸ்

  • ஏர் இந்தியா விமானங்கள் துருக்கிய மற்றும் ஜெர்மன் விமானப் போக்குவரத்துக்
  • பயண நேரத்தை 15 நிமிடங்கள் வரை குறைத்ததாக அவர் தெரிவித்தார்
  • கராச்சி கட்டுப்பாடு நிலையம் ஏர் இந்தியா நிவாரண விமானத்தை வரவேற்கிறது
New Delhi:

கொரோனா நோய் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் மக்களையும், நிவாரண பொருட்களையும், உலகளாவிய அளவில் கொண்டு சென்று சேவைபுரிந்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஏர் இந்தியாவின் சேவையை பாகிஸ்தானும் தற்போது பாராட்டியுள்ளது.

ஏப்ரல் 2-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் மும்பையிலிருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு இரண்டு விமானங்களை இயக்கியது. மார்ச் 25 அன்று பிரதமர் மோடி அறிவித்த மொத்த ஊரடங்கிற்கு பின்னர் இந்த விமானம் நிவாரண பொருட்களை கொண்டுசென்றுள்ளது. "மும்பையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு எங்களது விமானம் புறப்பட்டது, நாங்கள் 5 மணி அளவில் பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்தோம். அதன் பிறகு நாங்கள் அங்குள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் அதிர்வெண்களை மாற்றினோம் அதன் பிறகு ஏ.டி.சி-யைத் எங்களால் தொடர்பு கொள்ள முடிந்தது," என்று கூறினார் ஒரு மூத்த ஏர் இந்திய அதிகாரி.

அப்போது பாகிஸ்தான் ஏ.டி.சி-யில் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) இருந்து வந்த முதல் வார்த்தைகள் இந்திய விமானிகளை ஆச்சரியப்படுத்தின. "அஸ்-சலாமு அலைகம் (உங்களுக்கு அமைதி உண்டாகுக) கராச்சி கட்டுப்பாடு நிலையம் ஏர் இந்தியா நிவாரண விமானத்தை வரவேற்கிறது" என்று அவர்கள் கூறியதாக இந்தியா அதிகாரி என்.டி.டிவி-யிடம் கூறினார். "நீங்கள் பிராங்பேர்ட்டுக்கு நிவாரண விமானங்களை இயக்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று ஏடிசி கோரியது, அதற்கு ஏர் இந்தியா விமானியும் உறுதிப்படுத்தி பதிலளித்தார்.
 

6qpsphbg

ஏர் இந்தியா அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தான் ஏ.டி.சி அதிகாரிகள் இந்திய விமானிகளிடன் இது போன்ற இக்கட்டான சூழலில் நீங்கள் விமானத்தை இயக்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது என்றும், மேலும், தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை அவர்கள் தெரிவித்ததாகவும் இந்திய அதிகாரிகள் கூறினார். மேலும் என்.டி.டிவி-யிடம் பேசிய இந்திய ஏ.டி.சி அதிகாரி, பாகிஸ்தான் ஏ.டி.சி அதிகாரிகள் தங்களை பாராட்டியது மட்டும் இல்லாமல் தங்களை கராட்சிக்கு மிக அருகாமையில் பறக்க அனுமதித்து தங்களது பயண நேரத்தை 15 நிமிடங்கள் வரை குறைத்ததாக அவர் தெரிவித்தார். 

அதுமட்டும் இல்லாமல் ஈரான் வான்பகுதியை நாங்கள் நெருங்கியபோது அங்கும் பாகிஸ்தான் ஏ.டிசி தங்களுக்கு உதவியதாகவும், பொதுவாக ஈரான் வான்பகுதியை கடக்க அதிக நேரம் எடுக்கும் என்றும், ஆனால் அவர்களும் தங்கள் எல்லையை கடக்க எளிதான பாதையை அளித்ததாகவும் இந்திய அதிகாரிகள் கூறினார். மேலும் ஏர் இந்தியா விமானங்கள் துருக்கிய மற்றும் ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றதாக அவர் கூறினார். எங்களது விமானம் சுமார் 09.15 மணிக்கு பிராங்பேர்ட்டை அடைய திட்டமிடப்பட்டது, ஆனால் அது 08.35 மணி நேரத்தில் தரையிறங்கியது" என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

அந்தந்த தூதரகங்கள் கோரியபடி, இந்தியாவில் சிக்கியுள்ள ஜெர்மன், பிரஞ்சு, ஐரிஷ் மற்றும் கனேடிய நாட்டினரை திருப்பி அனுப்ப 18 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சீனாவிலிருந்து முக்கியமான மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவது உட்பட அனைத்து விமானங்களும் சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் (டிஜிசிஏ) வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுகின்றன. இந்தியாவுக்கான முக்கியமான மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்காக ஏர் இந்தியா டெல்லி மற்றும் ஷாங்காய் இடையே சரக்கு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது; இந்த விமானங்கள் ஏப்ரல் 9 வரை இயங்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து கிட்டத்தட்ட 50,000 இறப்புகளுக்கு வழிவகுத்தது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியுள்ளது, மேலும் 75 பேர் இந்த நோயின் காரணமாக இருந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
 

.