This Article is From Aug 29, 2020

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 75,000க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை ஆக.7ம் தேதி கடந்த நிலையில், 23ம் தேதி 30 லட்சத்தை கடந்தது. 

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 75,000க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 75,000க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிப்பு!

New Delhi:

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக ஒரே நாளில் புதிதாக 75,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 34 லட்சத்தை கடந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கூடுதலாக, 1,021 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 62,550 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 34,63,972 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனினும், நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 26,48,998 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.47 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து, 7,52,424 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆக.4ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை ஆக.7ம் தேதி கடந்த நிலையில், 23ம் தேதி 30 லட்சத்தை கடந்தது. 

அதேபோல், தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 1,000 வரை பதிவாகி வருகிறது. எனினும், உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசிலை விட இந்தியாவில் சற்று குறைவாக உள்ளது. 

நாட்டில் அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 14,857 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,47,995 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,996 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,09,238 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஆந்திர பிரதேசத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. 

.