This Article is From Jun 19, 2020

கொரோனா எதிர்ப்பு மருந்து 'ரெம்டெசிவிர்' இம்மாத இறுதிக்குள் சந்தைக்கு வர வாய்ப்பு!

ரெம்டெசிவிருக்கு உரிமையாளரான கிலீட் சைன்சஸ் நிறுவனம், கடந்த மே 29-ம்தேதி மருந்தை பயன்படுத்த அனுமதி கேட்டு, மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்திருந்தது. அதற்கு சில  கட்டுப்பாடுகளின் அடிப்படையில் கடந்த 1-ம்தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Posted by

இந்தியாவில் ரெம்டெசிவிரை தயாரிக்க 6 மருந்து நிறுவனங்கள் அனுமதி கேட்டு மத்திய அரசை அணுகியுள்ளன.

Highlights

  • கொரோனா பாதிப்புக்கு எதிராக ரெம்டெசிவிர் சிறப்பாக செயல்படுவதாக தகவல்
  • மிகவும் அவசர நிலையில் மட்டுமே மருந்தை பயன்படுத்த அறிவுரை
  • இந்தியாவில் 6 நிறுவனங்கள் ரெம்டெசிவிரை தயாரிக்க அரசிடம் விண்ணப்பம்
New Delhi:

மிக அவசர  தேவைக்காக மட்டும் கொரோனா எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் இம்மாத இறுதிக்குள் சந்தைக்கு விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் மருந்து பொருட்கள் சந்தைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதல் தேவை. இந்த நிலையில், மிக  அவசர தேவைக்காக, கொரோனா எதிர்ப்பாக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிரை பயன்படுத்துவதற்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளால் ரெம்டெசிவிர் மருந்து  அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

கிலீட் சைன்சஸ் என்ற நிறுவனத்தால் இந்த ரெம்டெசிவிர் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா மிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதாவது வென்டிலேட்டர் இல்லாமல் சாதாரண ஆக்ஸிஜன் சப்ளை தேவைப்படுவோருக்கு இந்த மருந்தை கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

Advertisement

அமெரிக்காவிலும் ரெம்டெசிவிர் மிக அவசர தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை இன்னும் பரவலாக பயன்படுத்துவதற்கு, சில சோதனைகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. 

ரெம்டெசிவிருக்கு உரிமையாளரான கிலீட் சைன்சஸ் நிறுவனம், கடந்த மே 29-ம்தேதி மருந்தை பயன்படுத்த அனுமதி கேட்டு, மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்திருந்தது. அதற்கு சில  கட்டுப்பாடுகளின் அடிப்படையில் கடந்த 1-ம்தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் ரெம்டெசிவிரை தயாரிக்க 6 மருந்து நிறுவனங்கள் அனுமதி கேட்டு மத்திய அரசை அணுகியுள்ளன.  அவற்றில் 5  நிறுவனங்கள் கிலீட் சைன்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. 

இன்ஜக்சன் முறைப்படி ஊசி மூலம் ரெம்டெசிவிர் செலுத்தப்படும். கர்ப்பிணிகள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு இந்த மருந்து  ஏற்றது  அல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Advertisement