বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 08, 2020

தொடர்ந்து 4வது நாளாக அமெரிக்கா, பிரேசிலைவிட அதிக கொரோனா கேஸ்களை பதிவு செய்த இந்தியா: 10 தகவல்கள்!

Coronavirus Cases: 138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 2.33 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement
இந்தியா Edited by

நோய் தொற்றின் தாக்கம் குறித்து மதிப்பிடும் பாசிட்டிவ் விதிதம், 10.28 சதவீதமாக ஆக உள்ளது. நேற்று இது 10.88 சதவீதமாக ஆக இருந்தது. 

Highlights

  • இந்தியாவிலேயே மகாராஷ்டிரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • நேற்று ஆந்திராவில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழகத்திலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது
New Delhi :

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் தொற்றிலிருந்து 14.27 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளனர். தொடர்ந்து 4வது நாளாக இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசிலைவிட ஒருநாள் பாதிப்பில் அதிக கேஸ்களை பதிவு செய்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பான WHO கூறியுள்ளது. இதுவரை நாட்டில் 42,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 933 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். 

இது குறித்த 10 முக்கியத் தகவல்கள்:

1.நேற்று இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக, 62,538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 56,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல கடந்த புதன் மற்றும் செவ்வாய் கிழமைகளில் முறையே 52,509 மற்றும் 52,050 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் ஒருநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தொடர்ந்து 4வது நாளாக அமரிக்கா மற்றும் பிரேசிலை விட அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

2.தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்தியாவில் 60,000-க்கும் அதிகமான ஒருநாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை 50,000க்கும் மேலாக உள்ளது.

3.மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 

Advertisement

4.கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 10,483 பேருக்கும், ஆந்திராவில் 10,171 பேருக்கும், கர்நாடகாவில் 6,670 பேருக்கும், தமிழகத்தில் 5,880 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 4,404 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

5.மேற்குறிப்பிட்டுள்ள 5 மாநிலங்களில்தான் கொரோனா தொடர்பான இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. 

Advertisement

6.இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 68.32 சதவீதமாக உள்ளது. நேற்று இது, 67.98 சதவீதமாக இருந்தது. 

7.நோய் தொற்றின் தாக்கம் குறித்து மதிப்பிடும் பாசிட்டிவ் விதிதம், 10.28 சதவீதமாக ஆக உள்ளது. நேற்று இது 10.88 சதவீதமாக ஆக இருந்தது. 

Advertisement

8.138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 2.33 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமையான நேற்று, 5.98 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

9.உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.93 கோடியாக உயர்ந்துள்ளது. 7.21 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். 

Advertisement

10.உலகிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், 49 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில், 29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement