Read in English
This Article is From May 29, 2020

சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் ஜூன் 13 வரை நீட்டிப்பு!

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தொலைதூர பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கவும் அரசு உதவுகிறது. 

Advertisement
இந்தியா Edited by

சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் நீட்டிப்பு! (File)

New Delhi:

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் இதுவரை 45,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு லட்சம் பேரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் தவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தே பாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

கடந்த 7ம் தேதி முதல் 14ம் தேதிவரை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்ட வந்தே பாரத் மிஷன் தி்ட்டம் மூலம் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, பிலி்ப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.

2வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டம் மே 16-ம்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 18 நாடுகளில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த 2ம் கட்ட மீட்புப்பணியில் இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, கனடா, ஜப்பான், நைஜிரியா, கஜகஸ்தான், உக்ரைன், கிர்கிஸ்தான், பெலாரஸ், ஜார்ஜியா, தஜிகிஸ்தான், ஆர்மீனியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 2வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் வரும் ஜூன் 13ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தொலைதூர பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கவும் அரசு உதவுகிறது. 

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் ஒரு லட்சம் பேரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மொத்தம் 60 நாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள். இந்தியா திரும்புவதற்காக 3,08,200 பேர் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement