Coronavirus: இந்தியாவில் இதுவரை 23 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் இதுவரை 23 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 258 ஆக உயர்வு!
- அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 52 பேர் பாதிப்பு
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 258 பேரில் 17 பேர் இத்தாலியை சேர்ந்தவர்களும், 3 பேர் பிலிப்பைன்ஸ் சேர்ந்தவர்களும், இரண்டு பேர் லண்டனை சேர்ந்தவர்களும், மற்றும் இதர உள்ளவர்கள் கனடா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
மேலும், இந்தியாவில் இதுவரை 23 பேர் இந்த கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். டெல்லி, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231 ஆக இருந்தபோதே, 23 பேருக்கு பாதிப்பில் இருந்து குணப்படுத்து அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 வெளநாட்டவர்கள் உட்பட 52 பேருக்கும், அதற்கு அடுத்ததாக கேரளாவில் 7 வெளிநாட்டவர்கள் உட்பட 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் ஒரு வெளிநாட்டவர் அடங்குவர், உத்தரபிரதேசத்தில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 24 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. லடாக்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆகவும், ஜம்மு-காஷ்மீர் நான்கு ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலுங்கானாவில் 19 பேருக்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் 11 வெளிநாட்டினர் உள்ளனர். ராஜஸ்தானில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 17 பேருக்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. குஜராத்தில் ஏழு பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹரியானாவில், 17 பேருக்கு பாதிப்பு உள்ளன, இதில் 14 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தலா மூன்று பேருக்கு பாதிப்பு உள்ளதாக பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா இரண்டு பேருக்கும், புதுச்சேரி, சத்தீஸ்கர் மற்றும் சண்டிகரில் தலா ஒருவருக்கும் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.