This Article is From Apr 15, 2020

ஊரடங்கால் கடும் பாதிப்பு!! அரசின் உதவியை எதிர்பார்க்கும் விமானப் போக்குவரத்து துறை

'இந்தியாவில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் விற்கப்படும் வேகத்தை பார்க்கும்போது, உலகிலேயே 3-வது மிகப்பெரும் விமானப் போக்குவரத்து நாடாக இந்தியா மாறும்' என்று இந்தியாவின் தேசிய முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்ட் இந்தியா கூறியிருந்தது. இந்தக் கணிப்பை கொரோனா வைரஸ் தற்போது தூள் தூளாக்கி விட்டது.

ஊரடங்கால் கடும் பாதிப்பு!! அரசின் உதவியை எதிர்பார்க்கும் விமானப் போக்குவரத்து துறை

எரிபொருளுக்கு 40 சதவீத தொகையை விமான நிறுவனங்கள் செலவிடுகின்றன

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கால் விமானப் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
  • அரசின் உதவியை விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன
  • எரிபொருள் விலை, விமான நிலைய கட்டண குறைப்பு உள்ளிட்டவை எதிர்பார்ப்புகள்
New Delhi:

ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டவைகளில் ஒன்றாக விமானப் போக்குவரத்து துறை உள்ளது. அரசின் உதவி கிடைக்காவிட்டால், விமானப் போக்குவரத்து துறை இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 3-ம்தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சில விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15-ம்தேதி முதற்கொண்டு முன்பதிவுகளை ஆரம்பித்தன. தற்போது விமானங்கள் சேவை மே 3 வரை ரத்து செய்யப்பட்டிருப்பதால் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான தொகையை பயணிகளிடம் திருப்பி அளிக்கும் நிலைக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

elf62ch8

.

ஆனால் டிக்கெட் கேன்சலுக்கான தொகையை திருப்பி அளிக்க முடியாத நிலையில்தான் விமானப் போக்குவரதது நிறுவனங்கள் உள்ளன. இன்ஸ்டீட், ஸ்பைஸ் ஜெட், விஸ்தரா, இண்டிகோ, கோ ஏர் நிறுவனங்கள் கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான தொகையை வழங்கவில்லை. மாறாக பயணிகன் செலுத்திய டிக்கெட் தொகை, சேமிப்பில் இருக்கும் என்றும் இதனைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

விமான போக்குவரத்து நிறுவனங்களின் இந்த அறிவிப்பு, அந்தத்துறை எந்த அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது என்பதை நமக்கு தெரியப்படுத்துகிறது.

அரசின் உதவி கிடைக்காவிட்டால் சில விமான நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் இழுத்து மூடப்படும் நிலைக்கு செல்லலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் விமானப் போக்குவரத்தை ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்து மையம் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு, 'பெரும்பாலான இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் சரியான கட்டமைப்பு இல்லை. எனவேதான், எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார சிக்கல்கள் போன்ற அதிர்ச்சி தரும் விஷயங்களை அவற்றால் சமாளிக்க முடியவில்லை' என்று தெரிவித்துள்ளது.
 

44paagjg

.

உலகளவிலும் விமானப் போக்குவரத்து துறை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் செயல்படும் நிறுவனங்கள் பணியாளர்களை அதிகளவு வேலை நிறுத்தம் செய்துள்ளன. ஆனால் இந்தியாவில் அதுபோன்றதொரு அறிவிப்பு வெளியாகவில்லை.

அமெரிக்கா தனது நாட்டு விமானப் போக்கு வரத்து நிறுவனங்களை காப்பாற்ற 71 பில்லியன் டாலரை உதவியாக வழங்கியுள்ளது. பிரிட்டனிலும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளன. அடுத்த 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கத் தேவையான நிதியில் 80 சதவீதத்தை அரசு வழங்க வேண்டும் என்பது நிறுவனங்களின கோரிக்கையாக உள்ளது. மற்ற மற்ற நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் வருவாயின் பெரும்பகுதி விமானப் போக்குவரத்திலிருந்து கிடைக்கிறது. இந்த நாடுகளின் அரசுகள் நிறுவனங்களை பாதுகாக்க, செலவுக்கான மொத்த தொகையையும் ஏற்றுக் கொண்டுள்ளன. எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் செலவுகளுக்கு துபாய் அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் 500 மில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. 
 

7b8q9mbg

இந்தியாவைப் பொறுத்தளவில் 40 சதவீத செலவு எரிபொருள் வகைக்கு ஆகிறது. சர்வதேச அளவில் எரிபொருள் செலவுக்கான சராசரி 24 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் விமான எரிபொருள் விலையை குறைத்தால், சிக்கலில் தவிக்கும் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

இதேபோன்று தொழிலாளர்களுக்கான செலவுகள், விற்பனை, மார்க்கெட்டிங், விமான நிலைய செலவுகள், மற்ற போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றை நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. 

ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் அரசு உதவ வேண்டும், விமான நிலைய கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், விமான எரிபொருளுக்கான கலால் வரியை குறைக்க வேண்டும் ஆகியவை இந்தியாவில் செயல்படும் விமான நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது. 

வருமானம் குறைந்ததால் இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் ஏற்கனவே ஊதியக் குறைப்பை அறிவித்து விட்டன. கோ ஏர்  சில விமானிகளை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், சில ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. இதற்காக ஊதியம் ஏதும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால் இந்திய விமானப் போக்குவரத்து துறை பிரச்னையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது. 

'இந்தியாவில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் விற்கப்படும் வேகத்தை பார்க்கும்போது, உலகிலேயே 3-வது மிகப்பெரும் விமானப் போக்குவரத்து நாடாக இந்தியா மாறும்' என்று இந்தியாவின் தேசிய முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்ட் இந்தியா கூறியிருந்தது. இந்தக் கணிப்பை கொரோனா வைரஸ் தற்போது தூள் தூளாக்கி விட்டது. 

.