This Article is From Apr 20, 2020

ஊரடங்கு காரணமாக தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை: யோகி ஆதித்யநாத்

Yogi Adityanath received the news of his father's death during a meeting on the COVID-19 crisis, a senior bureaucrat tweeted.

ஊரடங்கு காரணமாக தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை: யோகி ஆதித்யநாத்

ஊரடங்கு காரணமாக தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை: யோகி ஆதித்யநாத் உருக்கம் (File photo)

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கு காரணமாக தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை
  • யோகியின் தந்தை இன்று காலை 10.44 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
  • எனது தந்தையின் இரங்கல் செய்தி கேட்டு மிகவும் வருந்தமடைந்தேன்
New Delhi:

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என யோகி ஆதித்யநாத் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக உத்தர பிரதசே  கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஸ் கே அவஸ்தி வெளியிட்ட அறிக்கையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தந்தை ஆனந்த் சிங் சில நாட்களாக உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 10.44 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தனது தந்தையின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக நாளை இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தந்தையின் இரங்கல் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். என் தந்தை எனக்கு உண்மையுள்ளவனாகவும், கடின உழைப்பாளனாகவும், தன்னலமற்றவனாகவும் இருக்க கற்றுக் கொடுத்துள்ளார். அவரது இறுதி தருணங்களில் நான் அவருடன் இருக்க விரும்பினேன். எனினும், 23 கோடி மக்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தை பாதுகாக்க வேண்டிய எனது பொறுப்பு காரணாமக முடியவில்லை. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாளை இறுதிச் சடங்கிலும் என்னால் கலந்துகொள்ள முடியாது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் போது ஊரடங்கு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு எனது தாய் மற்றும் உறவினர்களிடம் வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் நான் நேரில் வந்து பார்வையிடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் தந்தை ஆனந்த் சிங்கின் உடல் உத்தர காண்டில் உள்ள பவுரி மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. 

தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

"உத்தரப் பிரதேசத்தில் 959 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000ஐ தாண்டியுள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.