Read in English
This Article is From May 29, 2020

சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அவகாசம் நீட்டிப்பு: ரயில்வே அறிவிப்பு!!

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கூறிய 230 ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா

சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அவகாசம் நீட்டிப்பு: ரயில்வே அறிவிப்பு!!

New Delhi:

சிறப்பு ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் அவகாசத்தை 30 நாட்களில் இருந்து, 120 நாட்களாக அதிகரித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச்.25ம் தேதி முதல் அடுத்தடுத்த கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 31ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகின்றது.

இதனிடையே புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் முன்பதிவு காலம் 30 நாட்களாக இருக்கிறது.

இந்நிலையில், சிறப்பு ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் அவகாசத்தை 30 நாட்களில் இருந்து, 120 நாட்களாக அதிகரித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, மே.12ம் தேதி முதல் மற்றும் ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ராஜ்தானி ரயில்கள் மற்றும் 200 சிறப்பு மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரித்துள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கூறிய 230 ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது. இந்த ரயில்களில் பார்சல் மற்றும் லக்கேஜ் முன்பதிவிற்கும் அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் 31ம் தேதி காலை 8 மணி முதல் அமலுக்கு வருகிறது. மற்ற ரயில்களில் சாதாரண முன்பதிவு மற்றும் தட்கல் முறையில் இருக்கும் இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்கனவே இருந்த நடைமுறையிலே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


 

Advertisement