“இந்தியாவின் இறப்பு விகிதம் 3.2 என்கிற அளவில் உள்ளது.
New Delhi: “இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 10,000க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். மருத்துவமனையில் சிக்சைப் பெற்று வரும் நோயாளிகள் குணமடையும் தறுவாயில் உள்ளனர். முன்னதாக 14 நாட்களில் மீட்பு விகிதம் 10.5 என்கிற அளவிலிருந்த நிலையில் தற்போது 12 நாட்களில் இந்த விகிதத்தினை எட்ட முடிந்துள்ளது.“ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியாவின் இறப்பு விகிதம் 3.2 என்கிற அளவில் உள்ளது. இது உலக அளவில் மிகக்குறைந்த அளவாகும்.“ என வர்தன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,644 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 39,980 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்திருந்தது. தற்போது 28,046 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.