Coronavirus: சிறப்பு விமானத்தில் மீட்டு வரப்பட்ட இந்தியர்கள்: விமானத்தில் உற்சாகம்
ஹைலைட்ஸ்
- Crew of Air India Express plane celebrate special flight
- Aircraft brought Indians from abroad amid lockdown
- "Really proud to have this flight over here": Flight Captain
New Delhi: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஏர் இந்தியா விமானம் ஒன்று, அபுதாபியில் இருந்து இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, கேரளாவின் கொச்சிக்கு புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் இருந்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, சிறப்பு விமானங்களில் இருந்தவர்கள் தங்கள் மொபைலி எடுத்த அந்த வீடியோவில், அவர்களுடன் முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் அணிந்தபடி விமானக் குழுவினரும் உற்சாகமாக கூச்சலிட்டனர். தொடர்ந்து, அந்த விமானம் கேரளாவில் தரையிறக்கப்பட்டது. அப்போது, அந்த வீடியோவில், இந்த விமானத்தை இயக்கியதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அந்த விமானத்தின் கேப்டன் தெரிவிக்கிறார்.
அதன் பின்னர், ஹாய் நான் தீபக், கேபின் பொறுப்பாளர், இந்த விமானத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்கிறார். அவருக்கு பின்னால் இருந்த மற்ற குழு உறுப்பினர்களும், பயணிகளும் தங்கள் இருக்கையிலிருந்து நடக்கத் தொடங்கினர்.
கொரோனா வைரஸ் கட்டுபாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களில் சிலரை திரும்பக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த இரண்டு சிறப்பு விமானங்களும் அபுதாபி மற்றும் துபாயிலிருந்து 363 இந்தியர்களை அழைத்து வந்தன.
"தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விமானத்தை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி" ஜெய் ஹிந்த் என்று ஒரு குழு உறுப்பினர் மற்றொரு மொபைல் வீடியோவில் கூறுகிறார். அப்போது, மற்ற குழுவினர், அனைவரும் பாதுகாப்பு உடையில், இருந்தபடி, கைகளை உயர்த்தி, "ஜெய் ஹிந்த்" என்ற கூச்சலிடுகின்றனர்.
முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அபுதாபியில் இருந்து கொச்சிக்கு மாலை 5:07 மணிக்கு புறப்பட்டது. பயணிகள் விமானம், மற்றும் கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தும் "வந்தே பாரத் மிஷன்" என்ற பெயரில் பிரமாண்டமாக மீட்டு அழைத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக துபாய்-கோழிக்கோடு இரண்டாவது விமானம் மாலை 5:46 மணிக்கு புறப்பட்டது.
தொடர்ந்து, இந்தியா வந்த அனைத்து பயணிகளும் தட்பவெப்ப சோதனைகள் உட்படுத்தப்பட்டு, பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவர்கள் பேருந்துகள் மூலம் அவரவர், சொந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.