கொரோனா காற்று வழியாகவும் பரவுகிறது; ஆதாரங்களுடன் WHOக்கு எடுத்துரைக்கும் விஞ்ஞானிகள்!
ஹைலைட்ஸ்
- கொரோனா காற்று வழியாகவும் பரவுகிறது;WHOக்கு எடுத்துரைக்கும் விஞ்ஞானிகள்
- சிறிய துகள்கை மக்கள் சுவாசிக்கும் போதும், பாதிப்பு ஏற்படக்கூடும்
- வைரஸ் காற்றில் பரவும் என்பதற்கான சான்றுகள் நம்பும்படியாக இல்லை
காற்றின் சிறிய துகள்கள் வழியாகவும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைகளை திருத்த வேண்டும் என்று நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் மூக்கு அல்லது வாயிலிருந்து வரும் சிறிய துளிகளின் மூலமாக ஒருவருக்கு பரவுகிறது, இது கொரோனா பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும்போது அல்லது பேசும்போது வெளியேற்றப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இதனிடையே, அடுத்த வாரம் ஒரு விஞ்ஞான இதழில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட திட்டமிட்டுள்ள ஆய்வுகளை ஒரு திறந்த மடலாக உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பியுள்ளனர். அதில், 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் காற்றில் பரவும் சிறிய துகள்கள் மக்களைப் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டும் ஆதாரங்களை மேற்கோளிட்டு சுட்டிக்காட்டியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
இதைத்தொடர்ந்து, ராய்ட்டர்ஸ் நிறுவனம் உடனடியாக எழுப்பிய கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு பதிலளிக்கவில்லை.
தும்மலுக்குப் பிறகு காற்றில் பெரிதாக பரவக்கூடிய பெரிய நீர்த்துளிகளால் அல்லது காற்றோட்டம் இல்லாத ஒரு அறையில் வெளியேற்றப்பட்ட மிகச் சிறிய நீர்த்துளிகளால் எடுத்துச் செல்லப்பட்டாலும், கொரோனா வைரஸ் காற்று வழியாகப் பரவுகிறது. அதேபோல், மக்கள் அதனை சுவாசிக்கும் போதும், பாதிப்பு ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
எனினும், வைரஸ் காற்றில் பரவும் என்பதற்கான சான்றுகள் நம்பும்படியாக இல்லை என சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்ப முன்னணி மருத்துவம் பெனடெட்டா அலெக்ரான்ஸி நியூயார்க் டைம்ஸில் கூறும்போது, குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில், காற்றில் பரவுகிறதா என்பதை முடிந்துவரை சோதித்து பார்த்து வருகிறோம். ஆனால், உறுதியாகவோ, தெளிவாகவோ ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)