This Article is From Jul 28, 2020

இறப்பதற்கு ஒரு சில மணி நேரம் முன்பு கொரோனா நோயாளி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

Covid Patient Dies In Jhansi: 52 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ ஜான்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளியால் எடுக்கப்பட்டுள்ளது.

Covid patient dies in Jhansi: அதில், பேசுபவர் மூச்சு விடுவதற்கே சிரமப்படுகிறார்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா நோயாளி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
  • யோகி ஆதித்யநாத் அரசு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
  • உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் மகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
Jhansi, Uttar Pradesh:

உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரத்தில் உள்ள ஒரு உயர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளியால் வெளியிடப்பட்டுள்ள மனதை உருக்கும் வீடியோ ஒன்று, அவரது மரணத்திற்குப் பிறகு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளதா என யோகி ஆதித்யநாத் அரசு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. 

52 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ ஜான்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளியால் எடுக்கப்பட்டுள்ளது. அதில், பேசுபவர் மூச்சு விடுவதற்கே சிரமப்படுகிறார். அவரது உடைகள் ரத்தத்தில் நினைந்து காணப்படுகிறது. 

அதில், தண்ணீருக்கு எந்த வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. நான் மிகவும் சிரமமாக உணர்கிறேன். என்னை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும். இங்கே கவனிப்பும் இல்லை. எந்த ஏற்பாடுகளும் இல்லை. முழுவதும் அலட்சியமாக செயல்படுகின்றனர் என்கிறார். தொடர்ந்து, கொரோனா நோயாளிகளை காட்டுவதற்காக கேமராவை திருப்பி காண்பிக்கிறார். அதில் நோயாளிகள் அவரைச் சுற்றி படுக்கையில் உள்ளனர். 

இந்த வீடியோ எடுக்கப்பட்டதற்கும், அவர் உயிரிழந்ததற்குமான நேர இடைவெளி சரியாக தெரியவில்லை. உயிரிழந்த அந்த நபரின் மனைவி மற்றும் மகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜான்சியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என ஜான்சி தலைமை மருத்துவ அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

எனினும், அந்த மருத்துவ அதிகாரி வீடியோவில் அந்த நபர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் கூறவில்லை. உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு நடத்தும் கொரோனா பராமரிப்பு மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு மோசமாக சிகிச்சை அளித்ததாக எழுந்த பல குற்றச்சாட்டுகளில் இந்த வீடியோ சமீபத்தியது ஆகும்.

பிரக்யராஜ் நகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 57 வயது நோயாளி ஒருவர் 24 மணி நேரத்தில் அங்கிருந்து, செல்வது கேமராவில் பதிவாகிய நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமையன்று உயிரிழந்து காணப்பட்டார். 

இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறும்போது, மருத்துவனையின் அலட்சியமும், அங்கு அவர் எதிர்கொண்ட துன்புறுத்தல்களுமே, மருத்துவமனையில் இருந்து தப்பிச்செல்ல வைத்துள்ளது. எனினும், நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், மருத்துவமைனயில் இருந்து தப்பிச்செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, சனிக்கிழமை காலையில் அவர் தங்களை தொடர்பு கொண்டதாகவும், அப்போது மருத்துவமனையில் அவரது புகார்கள கேட்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

.