This Article is From May 12, 2020

கொரோனாவை வென்றது எப்படி? ’கேரளா மாடல்’ குறித்து கேட்டறிந்த கர்நாடகா!!

கொரோனாவை வென்றது எப்படி? ’கேரளா மாடல்’ குறித்து கேட்டறிந்த கர்நாடகா!!

கொரோனாவை வென்றது எப்படி? ’கேரளா மாடல்’ குறித்து கேட்டறிந்த கர்நாடகா!!

பாஜக அமைச்சர் ஒருவர் இடதுசாரி தலைமையிலான அரசின் கீழ் உள்ள அமைச்சரை அணுகுவது என்பது சாதாரணமானது அல்ல

ஹைலைட்ஸ்

  • கொரோனாவை வென்றது எப்படி? ’கேரளா மாடல்’ குறித்து கேட்டறிந்த கர்நாடகா!!
  • கொரோனா வைரஸை கையாள்வதில் கேரளா முன்னுதாரனமாக உள்ளது
  • நோயாளிகள் ஆரம்பத்திலே சிகிச்சை பெறுவது அவசியம்
Bengaluru:

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாண்ட விதத்திற்காக பரவலாக பாராட்டப்பட்ட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுடன், கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதாகர் ஆன்லைன் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

உடல்நலம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது தான். ஆனால், பாஜக அமைச்சர் ஒருவர் இடதுசாரி தலைமையிலான அரசின் கீழ் உள்ள அமைச்சரை அணுகுவது என்பது சாதாரணமானது அல்ல. 

இதுதொடர்பாக கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதாகர் கூறும்போது, நாம் அனைவரும் அறிவோம், இறப்பு விகிதத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸை கையாள்வதில் கேரளா முன்னுதாரணமாக உள்ளது. அது என்னை மிகவும் ஈர்த்தது. அதனால், வீடியோ கான்பரன்சிங் மூலம் கேரள சுகாதார அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ள விரும்பினேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சிறந்த நடைமுறைகள் குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். முன்னதாக நிபா வைரஸை கையாண்ட அனுபவம் அவர்களுக்கு இருந்தது, அதனால் அவர்களது பொது சுகாதார அமைப்பு எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதை தெரிவித்ததாக கூறினார். 

இந்த சந்திப்பு தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவும் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்:

மருத்துவ நிபுணரான கே.சுதாகார் கூறும்போது, நோயாளிகள் ஆரம்பத்திலே சிகிச்சை பெறுவது அவசியம் என்று கூறினார்.

கேரளாவில் நோயாளிகள் ஆரம்பத்திலேயே தங்களின் உடல்நிலை குறித்து உணர்ந்து, தாமாக முன்வந்து மருத்துவமனைக்கு சென்று சகிச்சை   பெறுகின்றனர். ஆனால், எங்களது மாநிலத்தில் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனால், எந்த ஒரு அமைப்பும் அவர்களை காப்பாற்றுவது இயலாதது என்றார்.  

நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பது குறித்த தகவல்களையும் பரிமாறிக் கொள்ளவதற்காக அடிக்கடி கலந்துரையாட இரண்டு மாநில அமைச்சர்களும், ஒப்புக்கொண்டுள்ளனர். 

கர்நாடகாவில் நேற்றைய தினம் மட்டும் புதிதாக 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் அங்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் முதன்முதலாக கடந்த ஜனவரி மாதத்தில், கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை அங்கு 512 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவை வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய கேரளா மாநிலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 

.