Read in English
This Article is From Jul 07, 2020

கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது: கர்நாடகா அமைச்சர்

கொரோனா காரணமாக மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். 

Advertisement
இந்தியா

கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது: கர்நாடகா அமைச்சர்

Highlights

  • கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது
  • எங்கோ நிலைமை கையை விட்டு வெளியே சென்றுவிட்டது
  • கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தம் 23,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.
Tumakuru :

கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக துமாகூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, துமாகூரில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தகவல்கள் படி, அவர்களது உயிர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம். 

நாம் அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அதை கட்டுப்படுத்துவது என்பது மாவட்ட அதிகாரிகளுக்கு கடினமான ஒரு கட்டமாக எட்டியுள்ளது. எங்கோ நிலைமை கையை விட்டு வெளியே சென்றுவிட்டது, "என்று அவர் கூறினார்.

கொரோனா காரணமாக மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். 

Advertisement

முன்னதாக, முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தம் 23,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். 13,255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 372 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement