Read in English
This Article is From May 09, 2020

வெறும் 16 ஆக்டிவ் கேஸ்; கொரோனா பாதிப்பைத் தட்டையாக்கிய கேரளா!

பல மாநிலங்களும், கொரோனா குறித்தப் பரிசோதனை செய்ய திணறி வந்தபோது, கேரளா அதை முனைப்பான திட்டமிடல் மூலம் சாதித்துக் காட்டியது. 

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

Coronavirus: கேரளாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டால் அவர், 28 நாட்கள் தனிமைப்படுத்த நிர்பந்திக்கப்பட்டார்.

Highlights

  • கேரளாவில் இதுவரை 503 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • அதில் 484 பேர் குணமடைந்துள்ளனர்
  • கொரோனா பாதிப்பால் 4 பேர் கேரளாவில் உயிரிழந்துள்ளனர்
Thiruvananthapuram:

கேரளாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது மாநில மருத்துவமனைகளில் வெறும் 16 பேருக்கு மட்டுமே நோய் தொற்றிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல் தெரிவித்துள்ளார் அம்மாநில நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஐசக். கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர் ஐசக் கூறியுள்ளார். 

“கேரளாவில் முதல் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 100வது நாளில், பாதிப்பின் தாக்கத்தை தட்டையாக்கியுள்ளோம். வெறும் 16 பேருக்கு மட்டுமே தற்போது மருத்துவமனைகளில் கொரோனாவிலிருந்து மீள சிகிச்சை அளித்து வருகிறோம். கொரோனாவின் 3வது அலைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்,” என ட்விட்டியுள்ளார் அமைச்சர் ஐசக். 

உலக சுகாதார அமைப்பின், கோவிட்-19 சிறப்புத் தூதர், மருத்துவர் டேவிட் நபார்ரோ, இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஜூலை இறுதிக்குப் பின்னர்தான் தட்டையாகும் என்று தகவல் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் ஐசக்கின் பதிவு போடப்பட்டுள்ளது. 

Advertisement

இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில்தான் முதல் 3 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை அங்கு 503 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 484 பேர் சிகிச்சையின் மூலம் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். 4 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

இந்த மாதத்தில் கேரளாவில் வெறும் 5 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மே 2 ஆம் தேதி 2 பேருக்கும், மே 4 ஆம் தேதி 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. 

Advertisement

அமைச்சர் ஐசக், கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு லைன்-கிராஃப் பகிர்ந்துள்ளார். அதில், ஏப்ரல் 9 ஆம் தேதிக்குப் பிறகு ஆக்டிவ் கேஸ்கள் படிப்படியாக குறைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Coronavirus: கேரள நிதி அமைச்சர் பகிர்ந்த கிராஃப்

அதே நேரத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல், கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்கள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

கேரளாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டால் அவர், 28 நாட்கள் தனிமைப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார். இது இந்தியாவில் வெறும் 14 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செய்யப்பட்டது போலவே, பலரின் மாதிரிகளை சுலபமாக பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. 

Advertisement

பல மாநிலங்களும், கொரோனா குறித்தப் பரிசோதனை செய்ய திணறி வந்தபோது, கேரளா அதை முனைப்பான திட்டமிடல் மூலம் சாதித்துக் காட்டியது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 59,662 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3,320 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 95 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரை கொரோனாவால் 1,981 பேர் உயிரிழந்துள்ளனர். 17,847 பேர் குணமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

குணமடைபவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, 26.59 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 29.91 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 

With input from PTI

Advertisement