This Article is From May 01, 2020

மே தினத்தில் கூடுதல் வேலை நேரங்களுக்குத் தயாராகும் தொழிலாளி வர்க்கம்!

குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் வேலை நேரத்தினை நீட்டித்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளர்களின் கூடுதல் வேலை நேரங்கள் கணக்கில் கொள்ளப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மே தினத்தில் கூடுதல் வேலை நேரங்களுக்குத் தயாராகும் தொழிலாளி வர்க்கம்!

இலக்குகளைப் பூர்த்தி செய்யக் குறைவான ஷிப்டுகளை கொண்டும், குறைந்த ஊழியர்களை கொண்டும் இயங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) உத்தரவு மே 3-ம் தேதியுடன் முடிவடைய இருக்கக்கூடிய நிலையில் தேசத்தின் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நேரத்தில் பெரும் மாற்றத்தினை சந்திக்க இருக்கின்றனர். 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகத் தொழிலாளர்களின் வேலை நேரத்தினை ஆறு மாநில அரசுகள் உயர்த்தியுள்ளன.

இலக்குகளைப் பூர்த்தி செய்யக் குறைவான ஷிப்டுகளை கொண்டும், குறைந்த ஊழியர்களை கொண்டும் இயங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு மூன்று மாதங்களுக்கு வேலை நேரம் நீட்டிப்பு அமலில் இருக்கும் என ஏப்ரல் 11-ல் அறிவித்திருந்தது.

குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் வேலை நேரத்தினை நீட்டித்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளர்களின் கூடுதல் வேலை நேரங்கள் கணக்கில் கொள்ளப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், சிறு குறு தொழில் நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படுவது குறித்து தங்களது சந்தேகத்தினை வெளிப்படுத்தியுள்ளன.

"தொழிலாள வர்க்க இயக்கங்களின் பல வருட போராட்டங்களுக்குப் பிறகு எட்டு மணி நேர மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதை அரசாங்கங்களால் தன்னிச்சையாக மாற்ற முடியாது. தற்போதைய மாற்றங்கள் சட்டவிரோதமானது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்" என தொழிலாளர் மக்கள் சாசனத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன் குமார் கூறியுள்ளார்

.