This Article is From Apr 14, 2020

குடிமகன்கள் கொண்டாட்டம்: மீண்டும் மதுக்கடைகள் இயங்க அனுமதி!

Coronavirus: ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அசாம் மற்றும் மேகாலயாவில் உள்ள மதுக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குடிமகன்கள் கொண்டாட்டம்: மீண்டும் மதுக்கடைகள் இயங்க அனுமதி!

Coronavirus: சமூக விலகலை கடைபிடித்து மக்கள் மதுபானங்களை வாங்க வேண்டும் என மேகாலயா மற்றும் அசாம் அரசுகள் தெரிவித்துள்ளன.

ஹைலைட்ஸ்

  • மீண்டும் மதுக்கடைகள் இயங்க அனுமதி!
  • அசாம், மேகாலயாவில் உள்ள மதுக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறப்பு
  • தினமும் ஏழு மணி நேரம் திறக்க அனுமதி
Guwahati:

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அசாம் மற்றும் மேகாலயாவில் உள்ள மதுக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இரண்டு மாநில அரசும் நேற்றைய தினம் அறிவிப்பை வெளியிட்டன. 

இதுதொடர்பாக அசாம் அரசு அளித்த உத்தரவில், மதுபானக்கடைகள், மொத்தக்கிடங்குகள், பாட்டில் ஆலைகள் மற்றும் மதுபான உற்பத்தி ஆலைகள் இன்று முதல் தினமும் ஏழு மணி நேரம் திறக்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், மேகாலயா அரசு வெளியிட்ட அறிவிப்பில், மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கிடங்ககுகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக விலகல் மற்றும் கைகள் சுத்தமாக இருப்பதை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அசாம் கலால் துறை வெளியிட்ட அறிவிப்பில், மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறந்திருக்கும்.. குறைந்த ஊழியர்களுடன் கடைகள் இயக்கும். மேலும், பணிபுரியும் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்ஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

மேகாலாயா கலால் துறை ஆணையர் பிரவீன் பக்ஷி அனைத்து மாவட்ட துணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மதுக்கடைகளை திறக்குமாறு மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, மதுக்கடைகளை மூடுவதற்கு பாஜக உட்பட ஆளும் மேகாலயா ஜனநாயகக் கட்சியின் கூட்டணி கட்சிகளும், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேகாலயாவில், இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 

இதைத்தொடர்ந்து, மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது குடிமகன்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

.