இந்தியாவில் கொரோனாவுக்கு 1,008 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கின்போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
- அவசர அழைப்பு எண்ணுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளன
New Delhi: ஊரடங்கின்போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக 1098 என்ற அவசர சிறப்பு உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. இதன்வழியே பொது முடக்கத்தின்போது 18,200 அழைப்புகள் வந்துள்ளன.
இதன் அடிப்படையில் 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியாவில் பொது முடக்கம் கடந்த மார்ச் 25-ம்தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மே 3-ம்தேதியுடன் பொது முடக்கம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,787 ஆக உயர்ந்திருக்கிறது. 1,008 பேர் உயிரிழந்துள்ளனர்.