This Article is From May 28, 2020

''மே 1-ம் தேதியில் இருந்து 91 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்'' - மத்திய அரசு

சமூக ஆர்வலர் மேதா பட்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர், வாக்கு தொடுத்துள்ளனர். இதனை 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. மேதா பட்கர் தனது மனுவில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உறைவிடம், உணவு உள்ளிட்டவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

''மே 1-ம் தேதியில் இருந்து 91 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்'' - மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

பொதுமுடக்கம் காரணமாக கடந்த மே 1-ம் தேதியில் இருந்து 91 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சிலர் நடைபயணமாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன. பசியால் தொழிலாளர்கள் வாடுவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. இந்த நிலையில், வெளி மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. 

சமூக ஆர்வலர் மேதா பட்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர், வாக்கு தொடுத்துள்ளனர். இதனை 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. மேதா பட்கர் தனது மனுவில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உறைவிடம், உணவு உள்ளிட்டவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இன்று வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், 'முதலில் போக்குவரத்துதான் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக காத்துக் கிடக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே முன்பதிவும் செய்து விட்டார்கள். 

ஒரே நேரத்தல் அவர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ரயில் இயக்கப்படும் வரையில் அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர். 

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக மத்திய அரசு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் மே 1-ம் தேதியில் இருந்து தற்போது வரை 91 லட்சம் பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களில் 84 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாயன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளிடம் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தது. வெளி மாநில தொழிலாளர்களுக்கு மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையே மும்பையில் இருந்து ரயில்கள் இயக்குவதற்கு மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.
 

.