This Article is From May 21, 2020

உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகள் வெளியீடு! - எதற்கெல்லாம் அனுமதி?

பயணிகள் கட்டாயம் தெர்மல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேபோல், பயணிகள் அனைவரும் தங்களது மொபைல்களில் ஆரோக்யா சேது செயலியை வைத்திருக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பயன்பாடு தேவையில்லை.

உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகள் வெளியீடு! - எதற்கெல்லாம் அனுமதி?

New Delhi:

கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் மே.25ம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என மத்திய அரசு நேற்றைய தினம் அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வழிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, விமான நிலைய முனைய கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயணிகள் கட்டாயமாக தெர்மல் சோதனை மண்டலம் வழியாக நடந்து செல்ல வேண்டும். அனைவரும் தங்களது மொபைல்களில் ஆரோக்யா சேது செயலியை வைத்திருக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பயன்பாடு தேவையில்லை. 

விமான நிலையங்களில் புதிதாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

  • பயணிகள் பயண நேரத்திற்கு 3 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் வந்தடைய வேண்டும்.
  • பயணிகள் தங்களது விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரம் முன்பே முனைய கட்டிடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

  •  அனைத்து பயணிகளும், கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்திருக்க வேண்டும்.

  •  பயணிகள் கட்டாயம் தெர்மல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேபோல், பயணிகள் அனைவரும் தங்களது மொபைல்களில் ஆரோக்யா சேது செயலியை வைத்திருக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பயன்பாடு தேவையில்லை.

  •  உடைமைகளை இழுத்துச் செல்லும் வண்டிகளுக்கு அனுமதி கிடையாது. அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட அனுமதிக்கப்படும்.

  •  மாநில அரசும், நிர்வாகமும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையம் வருவதற்கான பொது போக்குவரத்தையும், தனியார் கால்டாக்சிகளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  •  சொந்த வாகனங்கள் அல்லது குறிப்பிட்ட வாடகை கார் சேவைகள் மட்டுமே விமான நிலையத்திற்கு பயணிகள் மற்றும் ஊழியர்களை அழைத்து வருவதற்கும், அழைத்துச்செல்வதற்கும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்றைய தினம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் புரி தனது ட்விட்டர் பதிவில், மே.25-ம்தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் விமானப் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். 

தனி நபர் இடைவெளிக்காக 3 இருக்கைகள் இருக்கும் பிரிவில் நடு இருக்கையை காலியாக வைத்திருந்தால் டிக்கெட் விலைகள் அதிகரிக்கும் என்பதால் நடு இருக்கையை காலியாக வைத்திருப்பது "சாத்தியமில்லை" என்று அமைச்சர் ஹர்தீப் கூறியிருந்தார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, தற்போது கொரோனா காலத்திலும் விமான நிலையங்கள் விமான சேவையை துவங்க ஆயத்தமாகி வருகின்றன. 

தொடர்பு இல்லாத பாதுகாப்பு சோதனைகள் மற்றும் உணவுப் பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பது உறுதிசெய்யப்படும். 

அதேபோல், பயணிகள் பயன்பாட்டிற்காக வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு உள்ளது என்பதை குறிக்கும் விதமாக ஸ்டிக்கர் சிஸ்டத்தை பயன்படுத்த விமான நிலைய அதிகாரிகள் கால் டாக்சி ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

எனினும், சர்வதேச விமான போக்குவரத்து எப்போது மறுதொடக்கம் செய்யப்படும் என்பது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

லாக்டவுன் காலத்திலும் பெரும்பாலான விமான நிலையங்களில் சரக்கு விமானங்கள் போக்குவரத்து நடந்து வருகிறது. அதேபோல், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்டு வருவதற்காக செல்லும் சிறப்பு விமானங்களும் செயல்பட்டு வருகின்றன.

.