This Article is From May 23, 2020

புலம்பெயர் தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது: நிதி ஆயோக் தலைமை நிர்வாகி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது. இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என கூறி உள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது: நிதி ஆயோக் தலைமை நிர்வாகி

ஹைலைட்ஸ்

  • Migrant workers issue handled poorly: Amitabh Kant to NDTV
  • Government has been running special "Shramik" trains for migrants
  • India reported more than 1.18 lakh COVID-19 cases, over 3,500 deaths
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையை எதிர்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களை கவனித்துக்கொள்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் இன்னும் நிறைய செய்திருக்க முடியும் என்று நிதி ஆயோக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், தொழிற்சாலைகளிலும், செங்கல் சூளைகளிலும், கட்டுமான பணிகளிலும் ஈடுபட்டு வந்த கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உணவில்லாமல், தங்க இடமில்லாமல், வருமானமும் இல்லாமல் தவித்தனர். 

இதனால், கடந்த மாதம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல துவங்கினர். குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்தது. 

இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த் என்டிடிவியிடம் கூறியதாவது, ஊரடங்கு மற்றும் பரவலான வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டபோதிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது. இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என கூறி உள்ளார்.

புலம்பெயர்ந்தோர் பிரச்சினை ஒரு சவாலாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் பல ஆண்டுகளாக, நாம் சட்டங்களை உருவாக்கியுள்ளோம், இது பொருளாதாரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவில் பெருக வழிவகுத்தது.

தொழிலாளர்களை நன்கு கவனித்துக்கொள்வதை உறுதி செய்வது மாநில அரசாங்கங்களின் பொறுப்பாகும். இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டில், மத்திய அரசுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பங்கு உள்ளது. இது ஒரு சவாலாக இருந்தது, அங்கு நாங்கள் மிகச் சிறப்பாக செய்திருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். மாநில, உள்ளூர், மாவட்ட  நிர்வாகமே ஒவ்வொரு தொழிலாளியையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் கீழ் ஏழைகள் வெளிப்படுத்தியுள்ள தீவிர அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் நெருக்கடியைக் கையாள்வது குறித்த விமர்சனங்களுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது என கூறினார்.

.