This Article is From May 14, 2020

ஊரடங்கு நீட்டிப்பு? 5 லட்சம் பேர் கருத்து தெரிவிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

Coronavirus: தொடர்ந்து, இந்த மக்களின் இந்த ஆலோசனைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் படி, ஆளுநரை இன்று மாலை கெஜ்ரிவால் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு? 5 லட்சம் பேர் கருத்து தெரிவிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கு நீட்டிப்பு? 5 லட்சம் பேர் கருத்து தெரிவிப்பு
  • ஆளுநரை இன்று மாலை கெஜ்ரிவால் நேரில் சந்திக்கிறார்
  • பெருளாதாரத்தை சீரமைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசுக்கு 5 லட்சம் டெல்லி மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, இந்த மக்களின் இந்த ஆலோசனைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் படி, ஆளுநரை இன்று மாலை கெஜ்ரிவால் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார். 

இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, ஊரடங்கை தளர்த்தும் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி, டெல்லியில் திங்கட்கிழமை முதல் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருளாதாரத்தை சீரமைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடுக்கு அடுத்த படியாக டெல்லி உள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய காரணத்தால், சலூன்கள், அழகு நிலையங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட தொழில்கள் முடங்கியுள்ளன. அந்த இடங்களில் மக்கள் தொடர்பு கொள்ளக்கூடும் என்பதால் அவை ஆபத்தானவையாக கருதப்பட்டு, தொடர்ந்து மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, ஆன்லைன் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, வணிக அமைப்புகளிடம் இருந்து எங்களுக்கு பல ஆலோசைனகள் வந்துள்ளன. அதில், ஒற்றைப்படை, இரட்டைப்படை அடிப்படையில் சந்தைகளை திறக்க அனுமதிக்கும் படி கோரியிருந்தனர். 

சிலர் பேருந்துகளை பொது பேருந்து சேவைகளை இயக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பல அவலுலங்கள் தற்போது இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அனைவரிடமும் சொந்த வாகனம் கிடையாது. அவர்களுக்கு பொது போக்குவரத்து தேவை. அவர்கள் எப்படி அலுவலகம் சென்றடைவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் குறைந்த அளவில் மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரியிருந்ததாகவும் இது குறித்து ஆலோசனை செய்வோம் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

பெரும்பாலானோர் சமூக விலகல்களை கடைபிடிக்காதவர்கள் மீதும், முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார். 

முன்னதாக, மே.17ம் தேதிக்கு பிறகு அரசு என்ன செய்யலாம்? என்பது தொடர்பான பரிந்துரைகளை டெல்லி மக்கள் அரசுக்கு தெரிவிக்கலாம் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இந்த பரிந்துரைகளை 13ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அதனை இலவச எண்ணாண 1031, என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம், வாட்ஸ் ஆப் 8800007722 எண்ணுக்கும் அனுப்பி வைக்கலாம். அல்லது delhicm.suggestions@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு இ-மெயிலும் அனுப்பலாம் என்று கூறியிருந்தார்.

சிறந்த பரிந்துரைகள் தொடர்பாக மருத்துவர்களுடனும், வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

.