Read in English
This Article is From Jun 26, 2020

கொரோனா நெருக்கடி: மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானாவில் மத்தியக்குழு ஆய்வு!

இந்தியாவில் நேற்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 16,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Advertisement
இந்தியா

கொரோனா நெருக்கடி: மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானாவில் மத்தியக்குழு ஆய்வு! (Representational)

Highlights

  • கொரோனா நெருக்கடி: மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானாவில் மத்தியக்குழு ஆய்வ
  • அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அந்த குழு ஆய்வு செய்யும்
  • மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலாக 6,739 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தலைமையிலான மத்தியக்குழு ஜூன் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று, அந்த பகுதிகளில் கொரோனா மேலாண்மை முயற்சிகளை வலுப்படுத்துவதில் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சோதனை, கட்டுப்பாட்டு உத்திகள், மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், சிகிச்சை நெறிமுறைகள், கொரோனாவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உயிரிழப்புகளைக் குறைத்தல் போன்றவற்றுக்காக மாநில அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அந்த குழு ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவு மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலாக 6,739 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாதிப்பு எண்ணிக்கையும் 1,42,900ஆக உள்ளது. குஜராத்தில் 1,735 பேர் உயிரிழந்துள்ளனர். 28,943 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், தெலுங்கானாவில் இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளனர். 10,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

இந்தியாவில் நேற்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 16,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 418ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஒருலட்சம் பேரில் 1.06 என்ற அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது உலகிலே மிக்குறைந்த எண்ணிக்கையாக உள்ளது. உலகளவில் சராசரியாக ஒரு லட்சத்திற்கு 6.24 என்ற விகிதம் சராசரியாக உள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிய 1,007 ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில், 734 அரசுத் துறையிலும், 273 தனியார் நிறுவனங்களிலும் உள்ளன. ஜனவரி மாதத்தில் இருந்து, ஜூன்.24ம் தேதி வரை வரையறுக்கப்பட்ட கொரோனா சோதனைகளில் இருந்து மொத்தம் 75,60,782 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Advertisement