This Article is From May 28, 2020

'ஒரே நாளில் 460 விமானங்கள் இயக்கப்பட்டு 34 ஆயிரம்பேர் பயணம் செய்துள்ளர்' - மத்திய அரசு

சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
இந்தியா

பொது முடக்கம் ஏற்படுத்துவதற்கு முன்பாக நாள்தோறும் சராசரியாக 4 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர். 

Highlights

  • உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை கடந்த திங்களன்று தொடங்கியது
  • நேற்று ஒரே நாளில் 460 விமானங்கள் இயக்கப்பட்டு, 34,336 பேர் பயணம்
  • ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு
New Delhi:

நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 460 விமானங்கள் இயக்கப்பட்டு, 34,336 பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த திங்கள் முதல், உள்நாட்டு விமானப்போக்குவரத்து இயங்கி வருகிறது. 

இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், விமானப் போக்குவரத்தை இயக்குவது உகந்ததாக இருக்காது எனறு சில மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இருப்பினும், மத்திய அரசு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை தொடங்கி, நடத்தி வருகிறது. 

விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்ட திங்களன்று 428 விமானங்களும், செவ்வாயன்று 445 விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 460 விமானங்கள் இயக்கப்பட்டு, 34,336 பேர் பயணம் செய்துள்ளனர்.

Advertisement

பொது முடக்கம் ஏற்படுத்துவதற்கு முன்பாக நாள்தோறும் சராசரியாக 4 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர். 

உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்படுவதற்கு முன்பு, நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. 

Advertisement

சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement