This Article is From Apr 04, 2020

குற்றச் செயல்களை 42 சதவீதம் குறைத்த கொரோனா! போலீசார் தகவல்

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு கொரோனாவால் ஏற்படும் சமூக பரவலை தடுக்க போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம்தேதி வரையில் ஊரடங்கு நீடிக்கிறது.

குற்றச் செயல்களை 42 சதவீதம் குறைத்த கொரோனா! போலீசார் தகவல்

ஊரடங்கை நிலைநாட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கால் வீட்டை விட்டு வெளியே வராமல் மக்கள் வீடுகளுக்குள்ளே முடக்கம்
  • குற்றச் செயல்கள் 42 சதவீதம் குறைந்திருப்பதாக போலீசார் தகவல்
  • அதிக எண்ணிக்கையில் வாகன திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன
New Delhi:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில் டெல்லியில், 42 சதவீதம் அளவுக்கு குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு கொரோனாவால் ஏற்படும் சமூக பரவலை தடுக்க போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம்தேதி வரையில் ஊரடங்கு நீடிக்கிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் 15-ம்தேதியில் இருந்து மார்ச் 31-ம் தேதி வரையில் 1,971 குற்ற வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,415 வழக்குகள் பதிவாகியிருந்தது.

அதாவது 42 சதவீதம் அளவுக்கு குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த 1,971 வழக்குகளில் திருட்டு 53, செயின் பறிப்பு 181, கொடூரமாக தாக்குதல் தொடர்பாக 27, வீடு புகுந்து கொள்ளை 55 வழக்குகள் ஆகும்.

இதேபோன்று மோட்டார் வாகன திருட்டு 1,243, பெண்களுக்கு எதிரான குற்றம் 72, குழந்தைகள் கடத்தல் 150, விபத்து தொடர்பாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.