This Article is From May 22, 2020

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!!

நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயது முதியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் விமான பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!!

* ஆரோக்ய சேது செயலியில் தங்களது நிலை குறித்த தகவலை பயணிகள், பணியாளர்களிடம் காண்பிக்க வேண்டும்.

New Delhi:

வரும் திங்கள் முதல் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கான விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயது முதியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் விமான பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பயணிகளுக்கான விதிமுறைகள் -

* விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக பயணிகள் விவரங்களை அளிக்க வேண்டும்.

* முக கவசம் கட்டாயம் 

* பரிசோதனைகள் அனைத்தும் ஆன்லைனில் இருக்கும்

* ஒரு பயணி, ஒரேயொரு பேக் கொண்டு வர அனுமதி. ஆன்லைனில் சோதனை செய்யப்பட்டு டேக் வழங்கப்படும்.

* நோய்த் தடுப்பு பகுதியில் இருந்து வருவோருக்கு பயணம் செய்ய அனுமதியில்லை.

* ஆரோக்ய சேது செயலியை பயணிகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். 

* அனைத்து இடங்களிலும் தனிநபர் விலகலை கடைபிடிக்க வேண்டும். இதற்காக தரையில் அடையாளம் இடப்பட்டிருக்கும். அவற்றை பின்பற்ற வேண்டும். 

விமான நிலையத்தில் கடைபிடிக்க வேண்டியவை -

* பயணிகள் கட்டயாம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

* தெர்மல் வெப்பநிலைமானி வழியே பயணிகள் செல்ல வேண்டும்.

* பயணிகளின் லக்கேஜ் குறித்த அறிவிப்பு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். 

* பேக்கை பயணத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சோதனைக்கு அனுப்ப வேண்டும். 

* பயணிகளிடம் இருந்து பாதுகாவலர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

* ஆரோக்ய சேது செயலியில் தங்களது நிலை குறித்த தகவலை பயணிகள், பணியாளர்களிடம் காண்பிக்க வேண்டும். இந்த செயலி இல்லாவிட்டால் இப்போதே அதை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த ஆப் தேவையில்லை.

* தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வட்டம், சதுர வடிவில் அடையாளம் இடப்பட்டிருக்கும். 

* பயன்படுத்தக் கூடாது என அடையாளம் இடப்பட்டிருக்கும் நாற்காலிகளைஎடுக்க கூடாது. 

* போர்டிங் வாசலில் பாதுகாப்பு உபகரண பெட்டியை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். இதில் சானிட்டைசர், முக கவசம் உள்ளிட்டவை இருக்கும். 

* போர்டிங் கேட் அருகே பயணிகள் தங்களது அடையாள அட்டையை பணியாளர்களிடம் காட்ட வேண்டும். 

விமானத்திற்குள் செய்ய வேண்டியவை - 

* இடைவெளி விட்டு விமானத்திற்குள் செல்ல வேண்டும்.

* கழிவறையை பயன்படுத்துவதை கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும்.

* கழிவறை அருகே வரிசையில் நிற்க அனுமதியில்லை. துணைக்கு ஒருவரை மட்டுமே அழைத்துச் செல்லலாம்.

* உணவு வழங்கப்படாது. கொண்டு வரவும் அனுமதியில்லை. பயணிகள் இருக்கையில் வாட்டர் பாட்டில் வைக்கப்பட்டிருக்கும்.

* செய்தித் தாள்/பத்திரிகைகள் கொண்டு வருவதற்கு அனுமதியில்லை.

* விமானத்தை விட்டு இறங்கும்போதும், லக்கேஜ்களை எடுக்கும்போது தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

.