This Article is From May 20, 2020

மே 25-ம்தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் விமானப் போக்குவரத்து தொடக்கம்!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் கடைசியில் இருந்து உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

மே 25-ம்தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் விமானப் போக்குவரத்து தொடக்கம்!!

பயணிகள், விமான நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

ஹைலைட்ஸ்

  • வரும் திங்கள் முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடக்கம்
  • அனைத்து விமான நிலையங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
  • கட்டுப்பாடுகளுடன் விமானப் பயணம் தொடங்கும் என அறிவிப்பு
New Delhi:

மே 25-ம்தேதியான திங்கட் கிழமை முதற்கொண்டு கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

இந்த தகவலை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் புரி வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து உள்ளூர் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய கட்டுப்பாடுகளின்படி குறைவான பயணிகளைக் கொண்டு விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனி நபர் இடைவெளிக்காக 3 இருக்கைகள் இருக்கும் பிரிவில் நடு இருக்கையில் பயணிகள் அமர மாட்டார்கள் என தெரிகிறது. 

முன்னதாக 4-வது முறையாக பொது முடக்க அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தெரிவித்திருந்தார். 

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமானப் போக்குவரத்து இருந்து வருகிறது. 

.