This Article is From May 31, 2020

ஜூன் 30 வரை ஊரடங்கினை நீட்டிக்கின்றது மகாராஷ்டிரா! எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம்

மேற்குறிப்பிட்ட இடங்களை மக்கள் பயண்படுத்துவதற்கு காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 வரை ஊரடங்கினை நீட்டிக்கின்றது மகாராஷ்டிரா! எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம்
New Delhi:

நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கையானது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிரா அரசும் தனது மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவினை ஜூன் 30 வரை தளர்வுகளுடன் நீட்டித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது.
 

  • மாநிலத்தில் தளர்வுகள் ஜூன் 3 முதல் அமலாக்கப்படுகிறது. முதல் கட்டமாக சைக்கிள் ஓட்டுதல் / ஜாகிங் / ஓடுதல் / நடைப்பயிற்சி போன்ற தனிப்பட்ட உடல் பயிற்சிகள் கடற்கரைகள், பொது / தனியார் விளையாட்டு மைதானங்கள், சங்கங்கள்(societies) / நிறுவனங்கள், தோட்டங்கள் போன்ற இடங்களில் மக்கள் புழங்குவது கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உள்ளரங்குகளில்(indoor stadium) எவ்வித நடவடிக்கைகளும் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்குறிப்பிட்ட இடங்களை மக்கள் பயண்படுத்துவதற்கு காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பொது வெளிகளில் மக்கள் குழுவாக சேருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பெரியவர்களுடன் சேர்ந்து இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • மக்கள் தேவைகளையொட்டி குறிப்பிட நேர இடைவெளியில் மட்டுமே பொது வெளியில் இயங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
  • அதே போல மக்கள் தங்கள் அருகில் உள்ள பொதுவெளியை பயன்படுத்த வேண்டும் என்றும், நெடுந்தொலைவு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
  •  பொது மக்கள் தங்களில் உடல் நலங்களை பாதுகாக்க உடற்ப்பயிற்ச்சிகளை மேற்கொள்ள பொது வெளியை சமூக இடைவெளியுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • சுய தொழில்களில் ஈடுபடக்கூடிய பிளம்பர்ஸ், எலக்ட்ரீஷியன் போன்றவர்கள் சமூக விலகல் மற்றும் முக கவசங்களோடு, அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளுடன் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம்.
  • சுகாதாரம் மற்றும் மருத்துவம், நிதி, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், உணவு மற்றும் சிவில் சப்ளை, நகராட்சி சேவைகள் தவிர, தேவைக்கேற்ப மட்டங்களில் செயல்படுதல் போன்ற அரசு துறைகளில் குறைந்தபட்சமாக 15 சதவிகித ஊழியர்களை கொண்டு இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லது குறைந்தபட்சம் 15 ஊழியர்களை கொண்டு இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

.