Read in English
This Article is From Apr 28, 2020

ஆன்லைன் லுடோ விளையாட்டால் கணவன் மனைவியே இடையே விபரீதம்!

ஒவ்வொரு முறையும் விளையாட்டில் தான் தோல்வி பெறும்போது, அவர் தனது மனைவியை கடுமையாக தாக்கி வந்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

ஆன்லைன் லுடோ விளையாட்டால் கணவன் மனைவியே இடையே விபரீதம்! (Representational)

Highlights

  • ஆன்லைன் லுடோ விளையாட்டால் கணவன் மனைவியே இடையே விபரீதம்!
  • தான் தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்
  • அந்த பெண் இதுவரை எந்த போலீஸ் புகாரும் அளிக்கவில்லை
Ahmedabad:

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குஜராத்தின் வதோதராவில் ஆன்லைன் லுடோ விளையாட்டில் தன்னை தோற்கடித்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை கடுமையாக தாக்கி அவரது முதுகெலும்பை உடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ஊரடங்கு சமயத்தில் கணவரை வீட்டிற்குள் இருக்க வைக்க, தன்னுடன் ஆன்லைனில் லுடோ விளையாடும் படி அந்த பெண் கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்ந்து, இந்த சம்பவம் கடந்த வார இறுதியிலே வெளியில் தெரியவந்துள்ளது. வெமாலி பகுதியை சேர்ந்தவர்கள் குடும்ப வன்முறை தொடர்பாக அபயம் புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அந்த பெண் தினமும் அவரது கணவரால், கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

ஒவ்வொரு முறையும் விளையாட்டில் தான் தோல்வி பெறும்போது, அவர் தனது மனைவியை கடுமையாக தாக்கி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது முதுகெலும்பு உடைந்ததையடுத்து, அவரை மருத்துவரை பார்க்கும் படியும் வற்புறுத்தியுள்ளார். 

இதையடுத்து, முதுகெலும்பு உடைந்த அந்த பெண் மருத்துவரை பார்க்க சென்றுள்ளார். இதனிடையே, அபயம் புகார் எண்ணான 181ஐ தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து, எங்களது ஊழியர்கள் அந்த தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணிடம் பாதுகாப்பு வேண்டுமா என்றும் கேட்டுள்ளனர். எனினும், அவர் பாதுகாப்பு தேவையில்லை என்று மறுத்துள்ளார் என அபயம் ஒருங்கிணைப்பாளர் சந்திரகாந்த் மாக்வானா தெரிவித்துள்ளார். 

Advertisement

ஆன்லைன் விளையாட்டில் தோற்றதால் மனைவியை இவ்வாறு கொடூரமாக தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிகிச்சை முடிந்த பெண், கணவருடன் செல்வதற்கு விரும்பாமல் பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண் இதுவரை எந்த போலீஸ் புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement