This Article is From May 16, 2020

நாட்டிலேயே முதல் மாநிலமாக பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிய அரியானா!

ஏசி இல்லாத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேருந்துக்குள் 52 பேர் வரையில் சாதாரண நாட்களில் அமரலாம். ஆனால் சமூக இடைவெளி கருதி 30 பயணிகள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகின்றனர். 

நாட்டிலேயே முதல் மாநிலமாக பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிய அரியானா!

கடந்த மார்ச் 23-ம்தேதியுடன் பேருந்து சேவை,பொது முடக்கம் காரணமாக மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

New Delhi:

பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை அரியானா மாநிலம் நேற்று தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரியானாவின் போலீஸ் டிஜிபி மனோஜ் யாதவ், என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், 'அரியானாவில் வெளி மாநிலத்தவர்கள் பலரை பேருந்து மூலமாக அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றோம். ஆனால் அரியானாவுக்கு உள்ளேயே பல மாவட்டங்களில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது' என்றார். 

பேருந்துக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் செய்யப்பட வேண்டும். இடையில் எந்த இடத்திலும் பேருந்து நிறுத்தப்படாது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வெளி மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அரியானா அரசு அனுப்பி வைத்துள்ளது. 
 

vts7e88g

.

அரியானாவுக்குள் 20 வழித்தடங்களில் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக கடந்த மார்ச் 23-ம்தேதியுடன் பேருந்து சேவை,பொது முடக்கம் காரணமாக மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட முதல் நாளான நேற்று 8 வழித்தடங்களில் 196 பயணிகள் பயணம் செய்தனர். இதன் மூலமாக ரூ. 42,580 வருமானம் கிடைத்ததாக அரசு தெரிவித்துள்ளது. 

ஏசி இல்லாத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேருந்துக்குள் 52 பேர் வரையில் சாதாரண நாட்களில் அமரலாம். ஆனால் சமூக இடைவெளி கருதி 30 பயணிகள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகின்றனர். 

பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் பணியைத் தொடங்க அரியானா அரசு அனுமதி அளித்துள்ளது. சுமார் 35 ஆயிரம் தொழிற்சாலைகள் பணியை கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளன. 

.