This Article is From May 04, 2020

'சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால் முழு ஊரடங்கு கொண்டு வரப்படும்' - கெஜ்ரிவால் எச்சரிக்கை

மக்களின் இயல்பு வாழ்க்கையை திரும்பக் கொண்டு வரும் விதமாக பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் இன்று மதுபான கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement
இந்தியா Edited by

சமூக விலகல் கடைபிடிக்கப்படாததால் மதுக்கடைகள் மூடப்பட்டன.

Highlights

  • டெல்லியில் இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டன
  • மதுக்கடைகளில் நூற்றுக்கணக்கான குடிமகன் கூடியதால் பரபரப்பு
  • 'சமூக விலகல் கடைபிடிக்கப்படாவிட்டால் ஊரடங்கு போடப்படும்' - கெஜ்ரிவால்

சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டால் முழு ஊரடங்கு மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மார்ச் 25-ம்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. மே 17-ம்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை திரும்பக் கொண்டு வரும் விதமாக பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் இன்று மதுபான கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், கடைகள் இன்று திறக்கப்பட்ட போது நூற்றுக் கணக்கான குடிமகன்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர்.

சமூக விலகல் கடைபிடிக்கப்படாததால், அதிர்ச்சியுள்ள அதிகாரிகள் மதுக்கடைகளை மீண்டும் அடைத்து விட்டனர். இந்த நிலையில் சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால் மீண்டும் ஊரடங்கை ஏற்படுத்துவதை தவிர்த்து வேறு வழியில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை செய்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக ஆன்லைன் மூலம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

கடைகளை மூட வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம் சமூக விலகல் கடைபிடிக்கப்படாவிட்டால் ஊரடங்கை ஏற்படுத்துவதை தவிர்த்து வேறு வழி கடையாது. 

Advertisement

நாம் அனைவரும் பொறுப்பான குடிமக்களாக செயல்பட வேண்டும். கொரோனா வைரஸை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

Advertisement