বাংলায় পড়ুন Read in English
This Article is From May 18, 2020

தமிழகம் உட்பட 5 மாநில மக்கள் கர்நாடகாவுக்குள் நுழைய மே.31ம் தேதி வரை தடை!!

கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அன்று அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement
இந்தியா Edited by

தமிழகம் உட்பட 5 மாநில மக்கள் கர்நாடகாவுக்குள் நுழைய மே.31ம் தேதி வரை தடை!!

Highlights

  • தமிழகம் உட்பட 5 மாநில மக்கள் கர்நாடகாவுக்குள் நுழைய தடை
  • கர்நாடகாவுக்குள் மே.31ம் தேதி வரை நுழைவதற்கு தடை விதித்துள்ளது
  • கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்
Bengaluru:

மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டை சேர்ந்த பயணிகள் கர்நாடகாவுக்குள் மே.31ம் தேதி வரை நுழைவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒப்புதலுடன் மட்டுமே இனி பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 3 மாநிலங்களாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழகம் உள்ளது. 

கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,231ஆக அதிகரித்துள்ளது. எனினும், இன்று பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. 

அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா கூறும்போது, சிவப்பு மண்டலம் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர்த்து பிற பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்துகளில் 30 பயணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

Advertisement

ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட கால்டாக்சிகள் நாளை முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

தொடர்ந்து, பேசிய துணை முதல்வர் அஸ்வாத் நாராயன் கூறும்போது, கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அன்று அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

மேலும், நாளை முதல் பூங்காக்கள் திறக்கப்படும் என்று கூறிய அவர், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நெறிமுறைகளை மாநில அரசு பின்பற்றும் என்று அவர் கூறினார். 

கட்டுபாட்டு மண்டலங்களை தவிர்த்து பிற பகுதிகளில் அனைத்து கடைகளும் இயங்கலாம். எனினும், மால்கள், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகளுக்கு தொடர்து தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement