This Article is From May 23, 2020

டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு!

சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கு முன்பு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்வதற்காக நூற்றுக்கணக்கானோர் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். 

டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு!

இதற்காக மாநகராட்சி ஊழியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டனர்

New Delhi:

டெல்லியில் கொரோனா வைரஸ் சோதனை செய்வதற்காக காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசி தெளித்துள்ள சம்பவம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியால் அந்த இயந்திரத்தின் அழுத்தத்தை கையாள முடியாததால், அது திசைமாறியது. இது தவறுதலாக நடந்த சம்பவம் தான் என்று தெரிவித்துள்ளனர். 

இதற்காக மாநகராட்சி ஊழியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் 'ஷ்ராமிக்' சிறப்பு ரயிலில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கு முன்பு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்வதற்காக நூற்றுக்கணக்கானோர் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். 

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வலம் வரும் வீடியோவில், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் மீது கிருமி நாசினியை தெளிக்கிறார்.

இதுதொடர்பாக டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த பள்ளி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. அந்த பகுதி மக்கள் அங்கு தெருக்களிலும், வளாகங்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். அதன் காரணமாக அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது, சிறிது நேரம் இயந்திரத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை ஊழியரால் சமாளிக்க முடியாமல் இருந்ததுள்ளது. 

இதைத்தொடர்ந்து, இனிமேல் அந்த பணிகளை மேற்கொள்ளும் போது மிக கவனமாக இருக்குமாறு அந்த ஊழியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரி புலம்பெயர் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கோரினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர் திரும்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். இதில், பலர் நாற்றுக்கணக்கான கி.மீ தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். 

.