বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 25, 2020

கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி; எவையெல்லாம் செயல்படலாம்? செயல்படக்கூடாது?

India coronavirus lockdown: மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் செயல்பட தொடர்ந்து, தடை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே.3ம் தேதியுடன் முடிவடைகிறது. (AFP)

Highlights

  • எவையெல்லாம் செயல்படலாம்? செயல்படக்கூடாது? மத்திய அரசு அறிவிப்பு
  • ஊரடங்கு மே.3ம் தேதியுடன் முடிவடைகிறது.
  • குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் இயங்கலாம்
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் மே.3ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடைகள் இயங்குவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், நேற்றிரவு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், சலூன்கள் மற்றும் டெய்லர் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவானது வணிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், முதன் முறையாக அத்தியாவசிய, அத்தியாவசிய தேவை இல்லாத கடைகளும் இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் செயல்பட தொடர்ந்து, தடை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது. 

மேலும், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், விதிமுறைகள் தளர்த்தி தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம், கையுறை, சமூக விலகல் போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கட்டுப்பாடு தளர்வுகள் என்பது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் எவையெல்லாம் மீண்டும் இயங்கலாம்:

  • மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வெளியே செயல்படும் கடைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் உட்பட அந்தந்த மாநில, யூனியன் பிரதேசத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

  • Advertisement

    குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதன் அருகில் உள்ள சந்தைகளில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்கலாம்.

  • கிராமப்புறங்களில், பதிவுசெய்யப்பட்ட அனைத்து கடைகளும், சந்தைகளும் திறக்கலாம். நகரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தனித்து செயல்படும் கடைகளை மட்டும் திறக்கலாம்.

  • சலூன்கள் இயங்கலாம், ஆனால் அவை வணிக வளாகத்தில் இருந்தால் இயங்க அனுமதி இல்லை.

  • வணிக வளாகங்களில் அல்லாமல், தனி கட்டிடத்தில் செயல்படும் டெய்லர் கடைகளை திறக்கலாம். 

  • மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட சந்தைகளில் உள்ள கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி

  • நகர்ப்புறங்களில், அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை குடியிருப்பு பகுதிகள் அல்லது தனி கட்டிடத்தில் இயங்கும் கடையாக இருக்க வேண்டும்.

  • மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்டவை தவிர்த்து, உள்ள மற்ற வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எவையெல்லாம் இயங்க அனுமதி கிடையாது:

  • மால்கள் மற்றும் திரையரங்குகள்

  • அதிகமான கடைகளை கொண்ட கான் மார்க்கெட், கிரேட்டர் கைலாஷ், நேரு பிளேஸ் போன்ற வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

  •  மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மால்களில் உள்ள பல பிராண்ட் கொண்ட கடைகள் மற்றும் ஒரே பிராண்ட் கொண்ட கடைகள் இயங்க அனுமதி இல்லை. 

  • சந்தை வளாகத்தில் உள்ள கடைகள், வளாகங்களில் உள்ள கடைகள், பல பிராண்ட்கள் கொண்ட கடைகள் இயங்க அனுமதி இல்லை. 

  • உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பார்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் செயல்பட அனுமதி இல்லை. 

  • மதுபானக்கடைகள் இயங்க அனுமதி இல்லை. 

  • மால்களில் உள்ள துணிக்கடைகள் இயங்கவும் அனுமதி இல்லை. 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Advertisement