Read in English বাংলায় পড়ুন
This Article is From May 21, 2020

நாடு இயல்பு நிலைக்கு திரும்ப, விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர் திரும்பி செல்வதற்கு ’ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்’ இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
இந்தியா Edited by

நாடு இயல்பு நிலைக்கு திரும்ப, விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல வாரங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது, இந்தியாவை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது, அதனால் விரைவில் கூடுதல் ரயில் சேவைகளை தொடர்வதை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிகள் தொடரும் என்றார்.

Advertisement

அதேபோல், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்றும், அதற்கான ஆய்வுகளை நடத்தி, நெறிமுறையை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதி இறுதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்கள், மெட்ரோ, விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கின. 

Advertisement

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர் திரும்பி செல்வதற்கு 'ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்' இயக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே, ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்திருந்தது. 

தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் வழக்கமான பயணிகள் ரயில் சேவை துவங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisement

மூன்றாவது முறையாக ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்த நிலையிலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலே ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாநில அரசுகளும் குறைந்த அளவில் போக்குவரத்து சேவைகளை இயக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

பயணிகள் ரயில்களில் ஏறுவதற்கு முன்பாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அறிகுறி உள்ளவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அதேபோல், ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தங்களது மொபைல்களின் கட்டாயம் தொடர்பு கண்டறியும், ஆரோக்யா சேது செயலியை வைத்திருக்க வேண்டும். 

ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக தினமும் 12,000 ரயில்கள் ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வந்தன. 

Advertisement

கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் மே.25ம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என மத்திய அரசு நேற்றைய தினம் அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வழிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, விமான நிலைய முனைய கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயணிகள் கட்டாயமாக தெர்மல் சோதனை மண்டலம் வழியாக நடந்த செல்ல வேண்டும். அனைவரும் தங்களது மொபைல்களில் ஆரோக்யா சேது செயலியை வைத்திருக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பயன்பாடு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement