மும்பையில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 734 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
Mumbai: இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 20 சதவீதம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில்தான் இருக்கிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த சூழலில், மும்பையில் எந்தக் கட்டுப்பாடும் தளர்த்தப்படவில்லை என்றும் விதிகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக மும்பை போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
மும்பை மக்களே, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மும்பை கொரோனா பாதிப்பின் சிவப்பு மண்டலத்தில் இருக்கிறது. இங்கு எந்த வித கட்டுப்பாடும் தளர்த்தப்படவில்லை. அனுமதியின்றி வாகனங்களில் பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். விதிகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 734 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கொரோனா பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் குறைந்து வரும் சூழலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சென்னை உள்ளிட்ட சில இடங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சலூன்கடைகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன.
கேரளாவில் 50 சதவீத பணியாளர்களுடன் வணிக வளாகங்கள், சலூன்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பேருந்து, டாக்ஸி உள்ளிட்டவை குறைந்த பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.