Read in English বাংলায় পড়ুন
This Article is From May 25, 2020

ஊபர் கார் ஓட்டுநருடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி! பிரச்னைகளை கேட்டறிந்தார்

கடந்த சனிக்கிழமையன்று வெளி மாநில தொழிலாளர்களுடன் பேசிய வீடியோ ராகுல் காந்தி வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Advertisement
இந்தியா

டெல்லியில் 2 மாதங்களாக பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பாகத்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

Highlights

  • ஊபர் கார் டிரைவருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்
  • பொது முடக்கத்தால் பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
  • வெளி மாநில தொழிலாளர்களை சில நாட்களுக்கு முன்பு ராகுல் சந்தித்து பேசினார்
New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஊபர் கார் டிரைவர் ஒருவருடன கலந்துரையாடினார். பொது முடக்க காலத்தில் கார் ஓட்டுநர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தார். அவரது இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த வாரம்தான் ராகுல் காந்தி, நடைபயணமாக சொந்த ஊருக்கு செல்லும் வெளி மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். ஊபர் கார் ஓட்டுநருடன் பேசியது குறித்து ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது-

மிக சிறப்பான உரையாடலை ஊபர் கார் ஓட்டுநர் பரமானந்தனிடம் மேற்கொண்டேன். டெல்லியில் இந்த சம்பவம் நடந்தது. அவர் பொது முடக்கத்தால் ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார். 

Advertisement

இவ்வாறு ராகுல் கூறினார். ராகுல் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஊபர் ஓட்டுநரும், ராகுலும் சேர்களில் அமர்ந்திருக்கின்றனர். தெரு முனையில் டீக்கடை முன்பாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. 
 

.


டெல்லியில் 2 மாதங்களாக பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பாகத்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

Advertisement

கடந்த சனிக்கிழமையன்று வெளி மாநில தொழிலாளர்களுடன் பேசிய வீடியோ ராகுல் காந்தி வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏழைகளின் கையில் பணத்தை நேரடியாக அளிக்க வேண்டும் என்பது ராகுல் காந்தியின் கோரிக்கையாக உள்ளது. 

Advertisement