This Article is From Apr 15, 2020

94 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் கேன்சல்! ரூ. 1,490 கோடியை திருப்பி அளிக்கிறது ரயில்வே

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு, சராசரியாக, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தினமும் சுமார் 8.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

94 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் கேன்சல்! ரூ. 1,490 கோடியை திருப்பி அளிக்கிறது ரயில்வே

இந்தியாவில் தினந்தோறு சுமார் 15,000 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 2 கோடி மக்கள் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

New Delhi:

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் மொத்தம் 94 லட்சம் டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளது. இதற்கான தொகை ரூ. 1,490 கோடியை திரும்ப அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக மார்ச் 22 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டிருந்தது. இந்த நாட்களில் பயணத்திற்காக பதிவு செய்யப்பட்ட 55 லட்சம் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு ரூ. 830 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்படவுள்ளது.

ஊரடங்கு ஏப்ரல் 15 முதல் நிறுத்திக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் அன்றுமுதல் பயணம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்புதிவு செய்யப்பட்டன. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் ஏப்ரல் 15 முதல் மே 3 வரை பயணத்திற்காக செய்யப்பட்ட சுமார் 39 லட்சம் முன்பதிவுகளுக்கு ரூ. 660 கோடி திரும்ப அளிக்கப்படும். 

ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு அனைத்து பயணிகளும் முழு பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் தானாகவே திருப்பித் தரப்படும் என்றும், நியமிக்கப்பட்ட முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஜூலை 31 வரை பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் தினந்தோறு சுமார் 15,000 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 2 கோடி மக்கள் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

ஆன்லைனில் ரத்துசெய்யும் வசதி தொடர்ந்து செயல்படும் என்றாலும், மறு உத்தரவு வரும் வரை இ-டிக்கெட் உள்ளிட்ட ரயில் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய அனுமதியில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு, சராசரியாக, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தினமும் சுமார் 8.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

.