லோக் ஜான்ஷக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தனது தந்தையின் வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் முழு முடக்க(LOCKDOWN) உத்தரவினை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். மக்கள் வீட்டில் புதியதாக பல முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தொடர்ச்சியில் மத்திய உணவு மற்றும் நுகர்பொருள் துறை அமைச்சரான பீகாரை சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான் மற்றும் அவரது மகனும் சேர்ந்ததிருந்த வீடியோ ஒன்றினை ட்விட்டரில் அவரது மகனும் லோக் ஜான்ஷக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் பகிர்ந்திருக்கிறார்.
அதில், இந்த முழு முடக்க காலகட்டத்தில் முடி திருத்தும் கடைகள் மூடப்பட்டிருந்ததால், நாற்காலியில் அமர்ந்திருந்த தனது தந்தைக்கு சிரக் பஸ்வான் டிரிம்மர் கொண்டு தாடியை திருத்தும் பணியினை செய்திருக்கிறார். “இந்த ஊரடங்கு நேரங்கள் சில அற்புதமான நினைவுகளை உருவாக்குகின்றன. இந்த திறனை நான் கொண்டிருப்பதை ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை. சமூக விலகலுடன் கொரோனாவை எதிர்த்து போராடுவோம். அழகான நினைவுகளையும் உருவாக்குவோம்” என்று சிரக் பஸ்வான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஒரு மணிநேரத்திற்குள், 1000 லைக்குகளை அள்ளியது. தந்தைக்கு உதவிய சிரக் பஸ்வானை பயனாளிகள் பலர் பாரட்டடினர். ‘அற்புதம். ஒரு மகன் தனது தந்தையை அலங்கரிக்கிறான்” என்று ஒரு பயனர் குறிப்பிட்டிருந்தார்.
"உங்களைப் போன்ற ஒரு மகனைப் பெற்றதில் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என மற்றொரு பயனாளி தனது கருத்தினை பகிர்ந்திருக்கிறார்.
நாடு முழுவதும் 8,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தொற்றை சமாளிக்க முழு முடக்க நடவடிக்கையை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.