Read in English
This Article is From Apr 11, 2020

கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் பாதித்துள்ள மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30-வரை ஊரடங்கு!!

மக்கள் நடந்து கொள்ளும் விதத்தின் அடிப்படையில், சில தட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

மகாராஷ்டிராவை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Highlights

  • கொரோனாவால் நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிரா பாதிக்கப்பட்டுள்ளது
  • மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
  • தேசிய அளவில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்
Mumbai:

நாட்டிலேயே கொரோனா தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30-ம்தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்கள் நடந்து கொள்ளும் விதத்தின் அடிப்படையில், சில தட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஏப்ரல் 14-ம்தேதி முதல் ஏப்ரல் 30-ம்தேதி வரை மகாராஷ்டிராவில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும். மக்கள் நடந்து கொள்ளும் முறையில் அடிப்படையில்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மளிகைக்கடைகளில் தயவு செய்து மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டாம்' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

மகாராஷ்டிராவை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement