This Article is From Mar 29, 2020

பரவும் கொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்

ஆனால் ஒவ்வொரு பெட்டியிலும் எத்தனை நபர்களுக்கு சிகிச்சை வழங்கமுடியும் என்பது குறித்து அவர் ஏதும் குறிப்பிடவில்லை

பரவும் கொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்

மேலும் இதை செயல்படுத்த அனுமதி கிடைத்தவுடன் ஒவ்வொரு ரயில்வே மண்டலங்களிலும்

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க
  • சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது
  • 10 பெட்டிகளை இதுபோன்ற வார்டுகளாக மாற்றும் திட்டம்
New Delhi:

பரவி வரும் கொரோனா காரணமாக, சில ரயில் பெட்டிகளை தனிப்படுத்தப்பட்ட மருத்துவ வார்டுகளாக மாத்த திட்டமிட்டுருப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்திய மக்கள் 3 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற ஊரடங்கு உத்தரவினை அண்மையில் விதித்தார் பிரதமர் மோடி. மேலும் நாட்டின் உயிர்நாடியான ரயில்வே சேவையும் முழுமையாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இந்தியாவில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க, தற்போது ஒரு ரயில் பெட்டி மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ வார்டாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இதை செயல்படுத்த அனுமதி கிடைத்தவுடன் ஒவ்வொரு ரயில்வே மண்டலங்களிலும் ஒவ்வொரு வாரமும் 10 பெட்டிகளை இதுபோன்ற வார்டுகளாக மாற்றும் திட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ரயில்வே துரையின் வலைத்தள தகவலின்படி மொத்தம் 16 மண்டலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

"நோயாளிகள் சிறந்த மற்றும் சுகாதாரமான முறையில் குணமாக ஏதுவாக சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுகாதாரமான சூழலை ரயில்வே துறை வழங்கும்" என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு பெட்டியிலும் எத்தனை நபர்களுக்கு சிகிச்சை வழங்கமுடியும் என்பது குறித்து அவர் ஏதும் குறிப்பிடவில்லை.

அண்மையில் விதிக்கப்பட்ட ஊரண்டங்கு நடவடிக்கையால் ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கு முற்றிலும் தடைப்பட்டதால், பிற மாநிலங்களில் வேலை செய்யும் மக்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேரூந்துகளுக்காக அலைமோதிக்கொண்டு காத்திருக்கும் மக்கள் கூட்டத்தால் இந்த தொற்று நோய் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் தற்போது சூழ்ந்துள்ளது. 

சனிக்கிழமையன்று, டெல்லியில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சுமார் 270 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி ஒருவர் நடுவழியில் சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுபோன்று நடந்தே சொந்த ஊர் திரும்பும் மக்களுக்காக நெடுஞ்சாலைகளிலேயே உணவு மற்றும் தங்குமிடம் வழங்குமாறு மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குவதாக உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

.