Read in English
This Article is From May 19, 2020

வாகன போக்குவரத்தினை அனுமதிக்கின்றது உ.பி அரசு! லாக்டவுன் 4.0 வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லி, நொய்டா, காசியாபாத் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்தினை அனுமதித்துள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா
Lucknow:

நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கையானது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேச அரசு அம்மாநிலத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லி, நொய்டா, காசியாபாத் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்தினை அனுமதித்துள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

  • உணவகங்கள் மற்றும் இனிப்பு கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தாலும், பார்சல் மற்றும் டெலிவரிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இயங்குவதற்கான அனுமதியை மாநில அரசு வழங்கியுள்ளது.
  • மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி அனைத்து சந்தைகளும் வெவ்வேறு நாட்களில் செயல்படும். ஆனால், வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
  • நான்கு சக்கர வாகனங்களை பொறுத்த அளவில், ஓட்டுநருடன் இரு பயணிகளும், இரு சக்கர வாகனங்களில் பெண்கள் இருந்தால் ஓட்டுநருடன் ஒரு பெண்  பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலங்களுக்கிடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • காய்கறி சந்தைகள் சில்லறை வர்தகத்திற்காக காலை 7-9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Advertisement