বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 30, 2020

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மீன்களை ஆன்லைனில் விற்கும் மேற்கு வங்க அரசு!!

மேற்குவங்கத்தின் மீன்வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விற்பனை நடவடிக்கைகளை மாவட்ட வாரியாகவும் மேற்கொண்டுள்ளது. அரசு பணியாளர்கள் வாகனங்கள் மூலமாக மக்களிடம் மீன்களை விற்று வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி விலையை பன்மடங்கு வியாபாரிகள் உயர்த்தி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

Highlights

  • ஊரடங்கால் மீன் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன
  • விலைவாசியை கட்டுப்படுத்த ஆன்லைன் மார்க்கெட்டில் மேற்குவங்க அரசு இறங்கியது
  • மொபைல் ஆப் மூலம் மீன்களை மக்கள் ஆர்டர் செய்துகொள்ள முடியும்
Kolkata:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் விதமாகவும் மேற்கு வங்கத்தில் ஆன்லைன் மூலம் மீன்கள் விற்பனையை மாநில அரசு தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க மீன்வள மேட்பாட்டுத்துறை சார்பாக மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் இருந்த இடத்தில் இருந்தவாறு, தேவையான மீன்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி விலையை பன்மடங்கு வியாபாரிகள் உயர்த்தி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருப்போருக்கு விலைவாசி உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது.

இந்த சிக்கலை சரி செய்யும் விதமாக அரசே ஆன்லைன் மீன் விற்பனையை தொடங்கியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Advertisement

மேற்குவங்கத்தின் மீன்வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விற்பனை நடவடிக்கைகளை மாவட்ட வாரியாகவும் மேற்கொண்டுள்ளது. அரசு பணியாளர்கள் வாகனங்கள் மூலமாக மக்களிடம் மீன்களை விற்று வருகின்றனர்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் State Fisheries Development Corporation (SFDC) என்ற பெயரில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. கட்லா, ரோகு உள்ளிட்ட வகை வகையான மீன்கள் ஆப் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement