தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மக்கள் அடர்த்தி போன்ற காரணிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலத்தின் சுற்றளவு தீர்மானிக்கப்படுகிறது
ஹைலைட்ஸ்
- Containment zone is where many positive cases have been found
- In these zones routes leading into the area are blocked completely
- The limitations are imposed to prevent further spread of the virus
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. கிட்டதட்ட 4500க்கும் அதிகமானோர் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தினை அடுத்து தேசிய தலைநகரான டெல்லி அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்ற பகுதிகளை காட்டிலும், டெல்லியின் தில்ஷாத் கார்டன் (வடகிழக்கு டெல்லி), நிஜாமுதீன் மற்றும் தெற்கு மோதி பாக் (தெற்கு டெல்லி) பகுதிகள் முழுமையாகச் சுகாதாரக் கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டு மற்ற பகுதிகளைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளது.
டெல்லியின் இந்த மூன்று பகுதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. சாலைகள் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டத்தினை காவல் துறையினர் நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். சில நேரங்களில் தேவைகளுக்காக வெளியில் வரும் மக்களை காவல்துறையினர் புகைப்படமெடுக்கின்றனர். லாரிகளைக்கொண்டு சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், தினமும் கிருமிநாசினி ட்ரோன்கள் மூலம் தெளிக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறான இறுக்கப்பட்ட கடும் தனிமைப்படுத்தலை இப்பகுதி மக்கள் முன்னெப்போதும் கண்டதில்லை.
இப்பகுதிகளில் வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இது வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்த இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தொடர்பு தடமறிதல் வரலாறு மற்றும் மக்கள் அடர்த்தி போன்ற காரணிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலத்தின் சுற்றளவு தீர்மானிக்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாட்டு மண்டலத்தில் சுகாதார அதிகாரிகளையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் நியமித்துத் தொற்று பரவாமல் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும், தொற்று அறிகுறிகளைக் கொண்டிருக்கக்கூடிய நபர்களை மருத்துவமனையில் அனுமதித்தல் போன்றவை இந்த பகுதிகளில் பிரதானமாகத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.
இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களின் ஒவ்வொரு கிலோமீட்டர் பகுதிகளும் மக்கள் புழக்கம் மற்றும் தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
டெல்லியின் தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தின் 2 மருத்துவர்கள் மற்றும் 16 செவிலியர்கள் கொரோனா தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப்பகுதி ஏற்கெனவே சுகாதார பாதுகாப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய மருத்துவரின் உறவினர் ஒருவர் இங்கிலாந்திலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியுள்ளார். இவர்தான் தொற்றுக்கான மூலமாக அறியப்பட்டுள்ளார். மேலும், இந்த மருத்துவமனையில் 19 நோயாளிகளின் மாதிரிகள் தொற்றுக்கான சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 180 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தற்போது 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய 38 வயதுடைய பெண் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மொஹல்லா கிளினிக் மருத்துவர் உட்பட எட்டு பேருக்கும் தொற்று ஏற்பட்டதையடுத்து தில்ஷாத் கார்டன் கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள இப்பகுதியில் காவல்துறையினர் பல தடுப்புகளை வைத்து அதிக கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகின்றனர். இப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கும், உள் நுழைவதற்கும் இரண்டு வழிகள் மட்டுமே இருக்கும். கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக்கப்பட்டுள்ளன. வெளியாட்களுக்கான அனுமதி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால், உணவு மற்றும் மருந்துக் கடைகள் எப்போதும் போல இயங்குகின்றன.
தில்ஷாத் கார்டனில் வசிக்கும் டினா சிங், "எங்கள் குடியிருப்பாளர்களை மிகவும் நன்றாக நிர்வகிக்கிறார்கள். அவசியமற்ற முக்கியத்துவம் இல்லாத சில கருத்துக்களை காவல்துறையினர் கையாண்டு வருகிறார்கள்" என்று கூறினார். மக்கள் பலர் தங்களுக்குத் தேவையான பொருட்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், கடைகளுக்குச் சரக்குகளைக் கொண்டுவரக்கூடிய லாரிகள் சொற்ப அளவிலே வருகின்றன என்று தில்ஷாத் கார்டனில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர் விஜய் குமார் கூறியுள்ளார்.
கிட்டதட்ட இத்தைபோலவே டெல்லி மார்கஸ் பகுதியிலுள்ள நிஜாமுதினில் 300 பேர் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு தினமும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
இதே போல தெற்கு டெல்லியின் மோதி பாக் நகரில் உள்ள ஒரு சேரி பகுதியில் உள்ள எம்ஸ்ய் துப்பரவு பணியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியும் கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் மக்கள் மிகவும் நெரிசலாக வாழ்கின்றனர். இதன் காரணமாக அரசு உடனடி பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இப்பகுதிக்கான 5 சாலைகளில் ஒரு சாலை மட்டுமே போக்குவரத்து மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முறையாவது கிருமிநாசினி செய்ய வருகிறார்கள். மக்களின் சமூக விலகல் பாதிக்காத வகையில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முறையாவது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
ரேஷன் கடை உரிமையாளர் உதய் சிங் கூறுகையில், “இப்பகுதியில் கொரோனா தொற்று ஒருவருக்கு உள்ளது என்பது கண்டறியப்பட்ட பிறகு, மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இங்கிருந்த காய் கணி அங்காடி 500மீ தொலைவில் மாற்றப்பட்டுள்ளது. இதர கடைகள் மூடப்பட்டுள்ளன. அதிகாரிகள் தினமும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் டெய்ரி பால் விற்பனையகமும், காய்கறி மற்றும் பழங்களுக்கான கடைகளும் 100மீ தொலைவில் உள்ளது.
இனி வரும் நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அதிகமானோர் அடையாளம் காணப்படுவார்கள் என்று டெல்லியின் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அனுமானித்துள்ளார். மேலும், 10-முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாக விரைவாகப் பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு பரிசோதனை கருவிகளை 1 லட்சம் அளவு ஆடர் செய்திருக்கின்றோம். இந்த கருவிகள் மூலமாக தில்ஷாத் கார்டன் மற்றும் நிஜாமுதீனின் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படும். தற்போது நிஜாமுதீன் பகுதியில் மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கருவிகள் வந்தவுடன் நாங்கள் சோதனைரய தொடங்குவோம் "என்று அமைச்சர் கூறியுள்ளார்.