This Article is From May 15, 2020

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு!

Coronavirus: மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். தற்போதைய நிலைமையை பார்க்கும் போது, சில பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும்.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு!

Coronavirus: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு!

Mumbai:

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மே.17ம் தேதிக்கு பின்னர் அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நேற்று ஒரு நாள் மட்டும் 1,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 16,500 ஆக அதிகரித்துள்ளது. 

இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் என்டிடியிடம் கூறும்போது, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். தற்போதைய நிலைமையை பார்க்கும் போது, சில பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடுவதே நமது முதல் சவால் என்றார். 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மும்பை, புனே, சோலாப்பூர், அவுரங்காபாத் மற்றும் நாசிக்கில் உள்ள மலேகான் டவுண் உள்ள பகுதிகளில் மே.31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். மாநில அரசின் நிலை குறித்து மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார். 

இந்த மே மாத இறுதியில் மகாராஷ்டிராவில் 50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக மகாராஷ்டிரா தொழில்துறைக்கு முக்கிய திட்டங்களை திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மும்பை தவிர, புனே, சோலாப்பூர், அவுரங்காபாத் மற்றும் மாலேகான் உள்ளிட்ட நகரங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம், அவை மாநிலத்தில் அதிகபட்சமாக வைரஸ் பாதிப்புகளைக் கொண்டுள்ளன.

இந்த நகரங்களில் கட்டுப்பாடுகளை விரிவாக்குவது குறித்து விவாதிக்க முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

மகாராஷ்டிராவில் 26,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.  இதில் மும்பையில் மட்டும் 15,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 596 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் கொரோனா பாதிப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஊழியர்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, மற்ற இடங்களிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

.