Read in English
This Article is From Jun 12, 2020

டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது: அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்!

டெல்லியில் 34,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,085 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா

டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது: அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்!

New Delhi :

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இல்லை, டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். 

ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை டெல்லி மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தெளிவுபடுத்தல் வந்துள்ளது.

டெல்லியில் 34,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,085 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, ஜூலை 31ம் தேதிக்குள் தலைநகரில் 5.5 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அரசு மிதிப்பிட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement